காலத்திற்கேற்ப அனைவரும் தற்போது டிஜிட்டல் மையமாகி வருகின்றனர். நாட்டில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய தொடங்கிவிட்டனர்.
என்னதான் ஆன்லைன் பரிவர்த்தனை இருந்தாலும் கூட நமது கைக்கு பணம் வேண்டும் என்றால் ஏடிஎம்-ஓ, பேங்கோ தான் செல்ல வேண்டும். அதற்கு நமக்கு ஏடிஎம் கார்டு வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதால் இனி சுலபமாக QRCode மூலமே ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம். எப்படி என பார்க்கலாம் வாங்க.
ஏடிஎம் கார்டுகள் இல்லாவிட்டாலும் கூட ஏடிஎம் மையம் சென்று பணமெடுக்க உதவும் ICCW அம்சத்தை வழங்க நாட்டின் அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி ஊக்குவித்து வருகிறது.
எஸ்.பி.ஐ., எச்.டி.எஃப்.சி. பிஎன்பி உள்ளிட்ட நாட்டின் பல முன்னணி வங்கிகளின் ஏடிஎம் மையத்தில் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷன் உள்ளது.
இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற எந்தவொரு யுபிஐ பேமண்ட் சர்விஸ் ஆப் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுத்து கொள்ளலாம்.
இந்த அம்சத்தை பயன்படுத்து பணம் எடுப்பதற்கான வரம்பு தற்போது ரூ.5000 ஆக உள்ளது. ஏடிஎம்களில் இருந்து யுபிஐ மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காது.
முதலில் ஏடிஎம் மையத்திற்கு சென்று withdraw cash-ஐ க்ளிக் செய்ய வேண்டும்
பின் ஏடிஎம் மெஷினில் டிஸ்ப்ளேவில் காட்டப்படும் யுபிஐ ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளவும். பின்பு குறிப்பிட்ட ஏடிஎம் ஸ்கிரீனில் ஒரு QR Code காட்டப்படும்
இப்போது உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள யுபிஐ அடிப்படையிலான ஆப்ஸில் ஒன்றை தேர்வு செய்து QR Code-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.
பிறகு ரூ.5000 வரம்பிற்குள் உங்களுக்கு தேவைப்படும் தொகையை எண்டர் செய்யவேண்டும். பின் உங்களது யுபிஐ பின்னை எண்டர் செய்து ப்ரொசீட் பட்டனை க்ளிக் செய்தால் பணம் வந்துவிடும்.