ஹேக்கர்கள் நம்முடைய ஸ்மார்ட்போனை எப்போது வேண்டுமானாலும் ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களைத் திருடக்கூடும். இதிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள சில முக்கிய விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம். அதேபோல USSD குறியீடுகளை நாம் தெரிந்து வைத்திருப்பது மூலமாக நமது செல்போனில் எதுவெல்லாம் ஆக்டிவாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
எனவே ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய USSD குறியீடுகள் என்னவென்று பார்க்கலாம். USSD குறியீடுகள் #,* போன்ற சிறப்பு ஆல்ஃபா எழுத்துக்களால் உருவாக்கப்பட்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தி நமது சாதனம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் திறனை கண்டறிய:
#0# - இந்த குறியீட்டை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் போனில் கேமரா, டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், சென்சார்கள், சரியாக வேலை செய்கிறதா என எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.
*#07# - உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சு வெளிவருகிறது என்பதைக் குறிக்கும் SAR மதிப்பை இந்த குறியீடு காட்டும்.
##4636## - இந்த குறியீடு உங்கள் ஸ்மார்ட்போனில் இணையம், வைபை மற்றும் பேட்டரி குறித்த விவரங்களை வழங்கும்.
##34971539## - உங்கள் ஸ்மார்ட் போனில் கேமரா சரியாக இயங்குகிறதா என்பதை இந்த குறியீடு பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் திருட்டு மற்றும் மோசடியை தடுக்க:
*#21# - ஒருவேளை உங்கள் தொலைபேசி எண் உங்களுக்கு தெரியாமலே வேறு எண்ணுக்கு பார்வேர்ட் செய்யப்பட்டிருந்தால், இந்த குறியீட்டைப் பயன்படுத்தி அதை நீங்கள் அறியலாம். சமீப காலமாக நடக்கும் கால் பார்வேர்ட் மோசடியை இந்த குறியீட்டைப் பயன்படுத்தி தடுக்க முடியும்.
*#06# - உங்களுடைய செல்போன் தொலைந்துவிட்டால் அதை கண்டுபிடிப்பதற்கு IMEI எண் அவசியம். இந்தக் குறியீட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் போட்டால் அதன் IMEI தெரிந்துவிடும்.
ஸ்மார்ட்போன் ரீசெட் செய்வதற்கு:
2767*3855# - இது மிகவும் ஆபத்தான குறியீடு. ஏனெனில் இதை உங்கள் சாதனத்தில் போட்டால் போன் முழுவதும் ரீசெட் ஆகிவிடும். ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போனை வேறு ஒருவருக்கு விற்கப்போகிறீர்கள் என்றால், இதைப் பயன்படுத்தி முழுவதும் ரீசெட் செய்து கொடுக்கலாம். விளையாட்டாகக் கூட இந்த குறியீட்டை முயற்சி செய்து பார்க்காதீர்கள். உங்கள் தகவல்கள் அனைத்தும் ஒரேயடியாக அழிந்துவிட வாய்ப்புள்ளது.