
பசுமை தொழில்நுட்பத்தில் கழிவு மேலாண்மை (Waste Management technology) என்பது கழிவுகளைக் குறைக்கும், வளங்களை பாதுகாக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் புதுமையான தீர்வுகளை பயன்படுத்துவதை குறிக்கிறது. கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்றி ஆற்றலை உருவாக்குகிறது.
கழிவு மேலாண்மையின் முக்கிய அம்சங்கள்:
கழிவுகளை குறைத்தல்: கழிவுகளை உற்பத்தி செய்யும் செயல்முறைகளை மேம்படுத்துவதன் மூலம் கழிவுகளை உருவாக்குவதை குறைக்க முடியும். கழிவு உற்பத்தியை குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்வதன் மூலம் கழிவு மேலாண்மையில் பூஜ்ஜியக் கழிவு இலக்கை அடையலாம்.
மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு: மரம், அலுமினியம், கண்ணாடி, பிளாஸ்டிக், மின்னணு பொருட்கள் மற்றும் கரிம கழிவுகள் போன்ற பலவகையான கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளங்களாக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது. இது இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன் ஆற்றல் நுகர்வையும் குறைக்கிறது.
ஆற்றலை மீட்டெடுப்பது(waste to energy): மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை வெப்பம், எரிபொருள்கள் அல்லது மின்சாரமாக மாற்றும் From Waste To Energy தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இது ஆற்றல் மீட்டெடுப்பின் ஒரு வடிவமாகும்.
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது: கார்பன் தடயத்தை குறைப்பதன் மூலமும், காற்று மற்றும் நீர் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதன் மூலமும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட் கழிவு மேலாண்மை(டிஜிட்டல் தீர்வுகள்): ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் பிற தளங்களில் சென்சார்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் கழிவு சேகரிப்பு மற்றும் மேலாண்மையை மேம்படுத்துகிறது. கழிவு மேலாண்மைக்கான ஸ்மார்ட் தீர்வுகள் மற்றும் கட்டமைப்புகள் மூலம் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், நிறுவனங்கள் சுற்று பொருளாதாரத்திற்கு (circular economy) மாற உதவுகிறது.
வட்ட பொருளாதாரம்: கழிவு பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் ஒரு சுழற்சியை உருவாக்குதல், நிறுவனங்கள் உலகளாவிய சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தங்கள் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.
அகமதாபாத் கழிவு ஆற்றல் ஆலை: கழிவுகளை ஆற்றலாக மாற்றும் பசுமை தொழில்நுட்பமாகும். இது கழிவு மேலாண்மையில் ஒரு புதுமையான அணுகுமுறையாகும். குஜராத்தின் மிகப்பெரிய திடக்கழிவு மின் உற்பத்தி நிலையமாகும். அகமதாபாத் அருகே பிப்லாஜில் அமைந்துள்ளது. இந்த ஆலை தினசரி 1000 மெட்ரிக் டன் கழிவுகளை செயலாக்கி, 15 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகள்: ஸ்மார்ட் குப்பை தொட்டிகள் என்பவை கழிவு மேலாண்மையை மேம்படுத்த சென்ஸார்கள், இணைய இணைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நவீன குப்பை தொட்டிகளாகும். குப்பை நிரம்பி வழியாமல் கண்காணிக்கவும், சரியான நேரத்தில் குப்பைகளை அகற்றுவதற்கான எச்சரிக்கைகளை அனுப்பவும் இவை உதவுகின்றன. கழிவுகள் நிரம்பியவுடன் இவை தானாகவே அறிவிக்கின்றன. இதனால் கழிவு சேகரிப்பு மிகவும் திறமையாகவும், சுற்றுச்சூழல் நேசமாகவும் உள்ளது.
மின்னணு கழிவு மேலாண்மை (e-waste Management): மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்து, அபாயகரமான பொருட்களை பிரித்தெடுத்து, மதிப்பு மிக்க உலோகங்களை மீட்டெடுக்கும் தொழில் நுட்பங்கள்.