பயனர்களை அச்சுறுத்தும் Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன?

பயனர்களை அச்சுறுத்தும் Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன?
Published on

உலகிலேயே வாட்ஸ் அப் தான் கோடிக்கணக்கான ஆக்டிவ் யூசர்ஸ் எனப்படும் தினசரிப் பயனர்களைக் கொண்ட செயலியாகும். இந்த காரணத்தினால் தான் இந்த செயலியானது பல போலி செய்திகள் பரவும் இடமாகவும் இருந்து வருகிறது. 

அந்த வகையில் whatsapp வழியாக தற்போது அதிகமாக நடந்து வரும் மோசடிதான் Pink WhatsApp Link மோசடி. அதாவது இந்த பிங்க் வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்வது மூலம், பழைய பச்சை நிற தோற்றத்தில் இருக்கும் வாட்ஸ் அப்பை முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றலாம்.  மேலும் இந்த வகை வாட்ஸ் அப்பை போனில் இன்ஸ்டால் செய்தால், பல புதிய அம்சங்கள் கிடைக்கும் எனக் கூறி, போலியான லிங்க் உள்ளடங்கிய மெசேஜ் ஒன்று வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து மும்பை காவல்துறையினர் பிங்க் வாட்ஸ்அப் வாயிலாக வரக்கூடிய பிரச்சனைகள் பற்றி வெளிப்படுத்தியுள்ளனர். யாரும் இதை தெரியாமல் கூட இன்ஸ்டால் செய்து விட வேண்டாம் என்றும், இது குறித்து வரும் மெசேஜ்களில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் whatsapp பயனர்களை எச்சரித்துள்ளனர். 

இந்த மெசேஜில் சொல்லப்பட்டுள்ள எல்லா தகவல்களும் பொய்யானவை. உண்மையில் அந்த மெசேஜுடன் இணைந்திருக்கும் லிங்க் ஒரு Phising லிங்க் ஆகும். ஒருவேளை நீங்கள் அதை கிளிக் செய்து எதையாவது டவுன்லோட் செய்து விட்டால், உடனடியாக உங்கள் ஸ்மார்ட்போன் பாதிக்கப்பட்டு அதிலுள்ள பல முக்கிய தகவல்களை ஹாக்கர்கள் திருடி கொள்ளவோ அல்லது உங்கள் ஸ்மார்ட்போனையே முழுவதுமாக அவர்களே கட்டுப்படுத்தும் படியான அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்து விடும். 

தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருமே தன் சொந்தத் தகவல்கள் எல்லாவற்றையும் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை நீங்கள் மோசடியில் பாதிக்கப்பட்டால், உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள மொபைல் எண்கள், புகைப்படங்கள், பாஸ்வேர்டுகள் என பலவும் திருடப்படலாம். ஏன் நீங்கள் இணையத்தில் பணப் பரிவர்த்தனை செய்யும் நபராக இருந்தால், உங்களுக்கு நிதி இழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே இதுபோன்ற மோசடி வலையில் யாரும் விழ்ந்து விட வேண்டாம். ஒருவேளை தவறுதலாக ஏற்கனவே பிங்க் வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்திருந்தால், உடனடியாக உங்கள் போனிலிருந்து அதை டெலிட் செய்து விடுங்கள். இனி இதுபோன்று whatsapp மட்டுமின்றி உங்களுக்குத் தெரியாத அல்லது நம்பகத்தன்மையற்ற எந்த சோர்ஸ்களிலிருந்தும் எதையும் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம். 

உங்களுக்கு ஏதாவது செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால், அதை கூகுள் பிளே ஸ்டோரிலோ அல்லது ஆப்பிள் ஸ்டோரிலோ அல்லது முறையான இணையதளங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யவும். மேலும் சரியான அங்கீகாரம் இன்றி உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த விதமான லிங்கையும் பிறருக்குப் பகிர வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com