தொழில்நுட்பம் நம் வாழ்வில் எல்லா அம்சங்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், Smart Home தொழில்நுட்பம் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்து கொண்டிருக்கிறது. வீடுகள் இனி வெறும் வீடுகளாக மட்டுமல்லாமல் நம் தேவைகளுக்கு ஏற்ப தானாகவே செயல்படும் அறிவார்ந்த இடங்களாக மாறி வருகின்றன. ஸ்மார்ட் ஃபோன்களில் இருந்து தொடங்கி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் தெர்மோஸ்டார்டுகள் என பல சாதனங்கள் நம் வீட்டை இணைத்து, நம் வாழ்க்கையை எளிதாக்கி வருகின்றன. இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எத்தகைய வளர்ச்சியப் பெறும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
5ஜி தொழில்நுட்பத்தின் வருகையால் வீடுகள் இணையத்துடன் மிக விரைவாக இணைக்கப்படும். இதன் மூலம் வீட்டுக்குள் உள்ள அனைத்து சாதனங்களும் உடனடியாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். ஸ்மார்ட் வீட்டில் உள்ள சாதனங்கள் பல்வேறு தளங்களுடன் இணைக்கப்பட்டு, நம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை நிர்வகிக்க உதவும். உதாரணமாக, தெர்மோஸ்டாட்டை Google Assistant அல்லது Amazon Alexa உடன் நினைத்து நாம் பேசுவது மூலமாகவே வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியும்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் வீட்டில் உள்ள சாதனங்கள் நம்மை நன்கு புரிந்துகொள்ள உதவும். இதன் மூலமாக நமது பழக்க வழக்கங்கள், தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவை தானாகவே சரி செய்துகொள்ளும். செயற்கை நுண்ணறிவு வீட்டில் இருக்கும் சாதனங்களை கண்காணித்து எந்த ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே அதைக் கண்டறிந்து சரி செய்ய உதவும்.
ஸ்மார்ட் வீடு தொழில்நுட்பம் நம் வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும். ஸ்மார்ட் கண்காணிப்பு கேமராக்கள், ஸ்மார்ட் கதவுகள், ஸ்மார்ட் அலாரங்கள் போன்ற சாதனங்கள் அத்துமீறல்களைத் தடுத்து நம்மை பாதுகாப்பாக வைக்கும். இருப்பினும் தனியுரிமை பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைத் தயாரிப்பவர்கள் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
இந்தத் தொழில்நுட்பத்தால் அதிக ஆற்றல் பயன்படுத்துவது குறைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும், இந்தத் தொழில்நுட்பம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் வெயிட் ஸ்கேல் மற்றும் ஸ்மார்ட் ஃபிட்னஸ் டிராக்டர்கள் போன்ற சாதனங்கள் நம் உடல் நிலையை கண்காணித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற உதவும். மேலும், இது நமது பொழுதுபோக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இந்தத் தொழில்நுட்பமானது எதிர்காலத்தில் பல்வேறு விதமான முன்னேற்றங்களுக்கு உட்பட்டு, நமது வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றக்கூடும். நாம் இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே, எளிதாக கட்டளை இடுவதன் மூலம் வீட்டில் உள்ள எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்த முடியும். இது ஒரு விதத்தில் நல்ல விஷயம்தான் என்றாலும், இதனால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டும். இருப்பினும் இந்த முன்னேற்றத்தை யாரும் தவிர்க்க முடியாது. அதற்கு ஏற்றவாறு நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்வதே சிறந்தது.