Smartphone Heating Issue.
Smartphone Heating Issue.

ஸ்மார்ட்போன் அதிக சூடானால் என்ன செய்யணும் தெரியுமா?

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அழைப்புகள், மெசேஜ், இமெயில், விளையாட்டு, சமூக ஊடகம், பொழுதுபோக்கு என இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே ஸ்மார்ட்போன் மூலமாக செய்கிறோம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு நாள் இல்லை என்றாலும் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடும். 

காலை எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை நமது கைகளிலேயே ஒரு ஒட்டுண்ணி போல ஸ்மார்ட்போன் ஒட்டிக்கொண்டு உள்ளது. இப்படி இருக்கும் ஸ்மார்ட்போன்கள் நாம் செய்யும் சில தவறுகளால் அதிக  சூடாகும்போது போனின் செயல் திறன் குறைந்து, காலப்போக்கில் ஆயுட்காலமும் குறைகிறது. எனவே இந்த பதிவில் ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

  1. ஸ்மார்ட்போன் வெப்பம் ஆவதற்கு முதல் காரணமாக சொல்லப்படுவது அதிக நேரம் தொடர்ச்சியாக பயன்படுத்துவதாகும். சிலர் பல மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடினாலோ அல்லது படங்களைப் பார்த்தாலோ ஸ்மார்ட்போன் சூடாகலாம். இப்படி செய்யும்போது ஸ்மார்ட்போனின் பிராசஸருக்கு அழுத்தம் அதிகம் ஏற்பட்டு சூடாகிறது. 

  2. உங்களது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய, நிறுவனம் பரிந்துரைத்த சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். மற்ற பிராண்டுகளின் சார்ஜரை பயன்படுத்தும்போது சில சமயம் சூடாகும். அதேபோல சார்ஜில் இருக்கும்போது ஸ்மார்ட்போனை பயன்படுத்தினாலும் பேட்டரி சூடாகி விரைவில் கெட்டுப்போகும் வாய்ப்புள்ளது. 

  3. உங்களது ஸ்மார்ட்போனை வெயிலில் அதிக நேரம் பயன்படுத்தாதீர்கள். ஏற்கனவே சூடாக இருக்கும் சூழலில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் அது மேலும் வெப்பமடையும். சில சமயங்களில் பேட்டரி வெடிக்கும் நிலை ஏற்படலாம்.

  4. அவ்வப்போது உங்கள் சாதனத்தில் ஏதாவது வைரஸ்கள் இருக்கிறதா என சரி பாருங்கள். இணையத்தில் எதையாவது தேடும்போது உங்களுக்கே தெரியாமல் வைரஸ்கள் ஸ்மார்ட்போன் உள்ளே வரும் வாய்ப்புள்ளது. இதனாலும் ஸ்மார்ட்போன் சூடாகும். 

  5. நீங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாத சமயத்தில் பின்னால் தேவையின்றி இயங்கும் ஆப்களை நிறுத்தி வையுங்கள். ஒரே சமயத்தில் அதிக ஆப்கள் இயங்குவதாலும் ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடையும். 

  6. அதேபோல ஸ்மார்ட்போனின் OS மற்றும் அப்ளிகேஷன்களை எப்போதும் அப்டேட் செய்யுங்கள். அப்டேட் செய்யாமல் நீங்கள் பயன்படுத்தும்போது அது பேட்டரியை அதிகம் உபயோகிப்பதால் ஸ்மார்ட்போன் வெப்பமாகும். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com