BLDC பேன்கள் சமீப காலமாகவே, அவற்றின் ஆற்றல் திறன், நீண்ட ஆயுள் காரணமாக பிரபலமடைந்துள்ளன. உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு BLDC மின்விசிறியை நீங்கள் வாங்க விரும்பினால், சில முக்கிய காரணிகளை கவனித்து வாங்க வேண்டும். அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.
ஆற்றல் திறன்: சராசரி பேன்களை விட BLDC பேன்கள் அவற்றின் ஆற்றல் திறனுக்காக நன்கு அறியப்படுகின்றன. இவை குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துவதால், இதன் விளைவாக மின்சாரக் கட்டணமும் குறைகிறது. மேலும் இந்த வகை ஃபேன்களில் மாறுபட்ட வேகம், டைமர்கள் போன்ற மின்சாரத்தை சேமிக்கும் அம்சங்கள் இருப்பதால், மின்சாரம் பெரிதும் சேமிக்கப்படுகிறது. எனவே அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஃபேனை தேர்ந்தெடுப்பது நல்லது.
குறைந்த இரைச்சல்: BLDC பேன்கள் சராசரி பேன்களை விட குறைந்த இரைச்சலையே ஏற்படுத்தும். எனவே இதன் சத்தம் எந்த வகையிலும் நமக்கு தொந்தரவு கொடுக்காது. இந்த ஃபேன்களை வாங்கும்போது அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள ஒலி அளவை கவனியுங்கள். நீங்கள் இந்த பேனை பயன்படுத்த இருக்கும் இடத்திற்கு ஏற்ப, டெசிபல் அளவுகள் கொண்ட ஃபேனை தேர்ந்தெடுக்கவும்.
வேகம் மற்றும் கட்டுப்பாடு: நீங்கள் வாங்கப்போகும் ஃபேனில் எதுபோன்ற கட்டுப்பாடு அம்சங்கள் உள்ளன என்பதை நன்கு கவனிக்கவும். பெரும்பாலான BLDC ஃபேன்களில் வேகத்தைக் கட்டுப்படுத்த ரிமோட் கண்ட்ரோல்கள் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. எனவே உங்களுக்குத் தேவையான வசதி அதில் இருக்கிறதா என்பதைப் பார்த்து தேர்வு செய்யவும்.
அளவு மற்றும் வடிவமைப்பு: இந்த வகை பேன்கள் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் வருகின்றன. அதில் எது உங்களுக்கு சிறந்ததாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய்யவும். குறிப்பாக காற்று நன்றாக வரும் வடிவமைப்புடைய மின்விசிறியைத் தேர்வு செய்வது நல்லது. மேலும் உங்களது அறையின் அளவைப் பொறுத்து மின்விசிறியை தேர்வு செய்யுங்கள்.
தரம் மற்றும் ஆயுள்: வாங்கும்போதே நல்ல BLDC மின்விசிறிகளில் முதலீடு செய்வது, நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பலனளிக்கும். எனவே நல்ல பிராண்ட் மின்விசிறிகளை தேர்வு செய்யவும். இவை விலையில் சற்று கூடுதலாக இருந்தாலும், நல்ல தரம் மற்றும் நீடித்த ஆயுளுடன் இருக்கும். அதேநேரம் உங்களது பட்ஜெட்டையும் கருத்தில் கொண்டு, சரியான மின்விசிறியைத் தேர்வு செய்யுங்கள்.
பராமரிப்பு: மின்விசிறி வாங்குவதற்கு முன்பாக அதன் பராமரிப்பு எளிதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அதை எளிதாக பொறுத்த முடியுமா என்பதையும் கவனிக்கவும். பெரும்பாலான மின்விசிறிகளை எளிதாக பொருத்திவிட முடியும் என்றாலும், சில மின்விசிறிகளில் கூடுதல் பாகங்கள் இருந்தால், அவற்றிற்கு வல்லுனர்களின் துணை தேவைப்படலாம். எனவே எளிதாக பராமரிக்கக் கூடிய மின்விசிறியைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து காரணிகளின் அடிப்படையில், உங்களுக்கான BLDC ஃபேனை தேர்ந்தெடுத்து பயன்படுங்கள்.