நிலவு திடீரென வெடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? 

moon
What would happen if the moon suddenly exploded?
Published on

சந்திரன் பூமியின் ஒரு இயற்கையான செயற்கைக்கோள். இது நமது கிரகத்தைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் ஒரு பெரிய பாறை ஆகும். இது பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பூமியைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் இதனால் காலநிலை மாற்றங்கள், பெருங்கடல் அலைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுவதால், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. 

அப்படி இருக்கையில் ஒருவேளை திடீரென்று நிலவு வெடித்து சிதறினால் என நடக்கும்? அடப்பாவி! நீ எதையுமே நல்லதா நினைக்க மாட்டியா எனக் கேட்கிறீர்களா? எல்லாம் ஒரு கற்பனை தானே. சரி வாங்க, நிலவு வெடித்து சிதறினால் என்ன ஆகும்னு இந்தப் பதிவுல தெரிஞ்சுக்கலாம்.  

நிலவு திடீரென வெடித்தால் அது பூமியில் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்கும். இந்த வெடிப்பானது அதிக அளவிலான ஆற்றலை வெளியிட்டு, பூமியை அதிவேகமாக தாக்கும் அதிர்வலைகளை உருவாக்கும். இதன் காரணமாக பூமி பேரழிவை சந்திக்கும். கட்டிடங்கள் இடிவது, தீ விபத்து போன்றவற்றால் அதிகப்படியான உயிர் சேதத்தை ஏற்படுத்தும். 

அதேநேரம் சந்திரனின் வெடிப்பு பூமியில் நீண்ட கால விளைவுகளையும் ஏற்படுத்தும். சந்திரனின் ஈர்ப்பு இல்லாமல் பூமியின் சுழற்சி வேகம் மாறும். இதனால் வானிலை மாற்றங்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். சந்திரன், சூரிய ஒளியை பிரதிபலிப்பதால், இரவு நேரத்தில் பூமி கொஞ்சம் வெளிச்சமாகிறது. எனவே, நிலவு இல்லாமல் பூமியில் இரவு நேரம் என்பது மிக இருண்டதாக இருக்கும். 

சந்திரன் பல கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இது பெரும்பாலும் கடவுள்கள் மற்றும் இறை நம்பிக்கையுடன் தொடர்புடையது. சந்திரன் இல்லாமல் இந்த கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் அவற்றின் அர்த்தத்தை இழக்கும். இன்றளவும் முஸ்லிம் மதத்தில் பிறை பார்த்து பண்டிகைகள் கொண்டாடும் வழக்கம் உள்ளது. எனவே சந்திரன் இல்லாமல் போனால், இவை அனைத்துமே கடினமானதாகிவிடும். 

இதையும் படியுங்கள்:
சுருங்கி வரும் நிலவு… பூமியின் நிலை என்ன? நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி! 
moon

ஆனால், யாரும் கவலைப்பட வேண்டாம். சந்திரன் வெடிப்பது சாத்தியமற்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரன் மிகவும் நிலையானது. அது வெடிப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு. மேலும் அதை வெடிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட எவ்விதமான அச்சுறுத்தலும் சந்திரனுக்கு இல்லை. இருப்பினும் ஒரு பெரிய விண்கல் மோதல் அல்லது சூப்பர்நோவா போன்ற சில அசாதாரண நிகழ்வுகள் சந்திரனை வெடிக்கச் செய்யலாம். 

சந்திரன் வெடிக்கும் ஒரு அரிய நிகழ்வை கற்பனை செய்து பார்க்கவே பயமாக உள்ளது. ஒருவேளை அவ்வாறு நடந்தால் அது பூமியில் பேரழிவை ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்கலாம். இதனால் பூமியின் தன்மையே முற்றிலுமாக மாறிவிடும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com