பூமியில் திடீரென நீர் உள்ள பகுதி நிலமாகவும், நிலம் உள்ள பகுதி நீராகவும் மாறினால் என்ன ஆகும்? 

Earth
Earth
Published on

பூமி அதன் அச்சில் சுற்றி வருவதால் பகலும் இரவும் மாறி மாறி வருகிறது. இது இயற்கையின் ஒரு அற்புதமான நிகழ்வு. ஆனால், திடீரென பூமி தன்னைத்தானே வித்தியாசமாக மாற்றி, நீர் உள்ள இடம் நிலமாகவும், நிலம் உள்ள இடம் நீராகவும் மாறினால் என்ன ஆகும்? என கற்பனை செய்து பாருங்கள். இதன் விளைவுகள் உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். 

கடல்கள் நிலமாக மாறுதல்: கடல் பகுதிகள் திடீரான நிலமாக மாறினால், கடலில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்கள் தங்களின் வாழ்விடத்தை இழந்து முற்றிலுமாக அழிந்துபோகும். மீன், நண்டு, இறால் போன்ற மனிதர்களின் உணவுச் சங்கிலியில் முக்கிய இடம் வகிக்கும் உயிரினங்கள் அழிவதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.‌

கடல்கள் இல்லாததால் நீராவி போக்கு குறைந்து, மழைப்பொழிவு கணிசமாகக் குறையும். இதனால், கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும். நீரின் அடர்த்தி நிலத்தை விட குறைவு என்பதால் புவி ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்பட்டு பூமியின் சுழற்சி முற்றிலுமாக மாறலாம். 

நிலம் நீராக மாறுதல்: 

நிலத்தில் உள்ள மனிதர்களின் குடியிருப்புகள் மொத்தமாக நீரில் மூழ்கி ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும். இதனால், கோடிக்கணக்கான மக்கள் அழிந்து போகும் நிலை ஏற்படலாம் அல்லது உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதுவரை நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் அழிந்து போய், உலகளாவிய பஞ்சம் ஏற்படு நிலைமையை மோசமாக்கும். நிலம் நீராக மாறுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலை மாற்றம் வேகமாக நிகழும். 

இதையும் படியுங்கள்:
2 மில்லியன் கடல் பறவைகள் கூடுகட்டும் இடம் எங்குள்ளது தெரியுமா?
Earth

மற்ற விளைவுகள்: கடல்கள் நிலமாக மாறும்போது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியாகி புவி வெப்பமடையும் வேகம் அதிகரிக்கும். புவியின் அமைப்பே முற்றிலுமாக மாறுவதால், பூமியில் அதிர்வுகள் எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கக்கூடும். நிலம் மற்றும் நீர் மாறும்போது பல உயிரினங்கள் தங்களின் வாழ்விடத்தை இழந்து அழிந்து போகும். இதனால், உயிரினங்களின் பன்முகத்தன்மை கடுமையாக பாதிக்கப்படும். 

பூமியில் திடீரென நீர் உள்ள பகுதி நிலமாகவும், நிலம் உள்ள பகுதி நீராகவும் மாறினால், அது மனித குலத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பேரழிவாக அமையும். இது ஒரு கற்பனையான விஷயம் என்றாலும், இயற்கை சமநிலையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இதை கற்பனை செய்து பார்க்கவே இவ்வளவு பயமாக இருக்கிறதே, ஒருவேளை உண்மையிலேயே அப்படி நடந்தால் எப்படி இருக்கும்? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com