ரோடு எதுக்கு? இனி வானம்தான் நமக்கு ரூட்டு! மொட்டை மாடியில் வந்து நிற்கும் மேஜிக் கார்!

Transport Technology
4 Modern Transport Technology
Published on

எதிர்காலத்தில் போக்குவரத்தை (Modern Transport ) ஆளப்போகும் நான்கு முக்கிய தொழில் நுட்பங்கள் தன்னாட்சி வாகனங்கள், ஹைபர்லூப், ட்ரோன் டாக்ஸிகள்/பேருந்துகள் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி & இணைக்கப்பட்ட வாகனங்களாகும். இவை பயணத்தை வேகமாகவும், பாதுகாப்பாகவும், திறமையாகவும் மாற்றும். மேலும் மின்மயமாக்கல் மற்றும் கார்பன் நடுநிலை அணுகுமுறைகளுடன் இணைந்து செயல்படும்.

1. தன்னாட்சி வாகனங்கள் (Autonomous Vehicles-AVs):

இவை மனிதர்களின் தலையீடு இல்லாமல், ஓட்டுநர்கள் இல்லாமல் தானாகவே இயங்கும் கார்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள். இவை AI, சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் செயல்பட்டு, மென்பொருட்களைப் பயன்படுத்தி பாதையை உணர்ந்து, விபத்துகளைக் குறைத்து, போக்குவரத்து நெரிசலைத் தணிக்க உதவும். இந்த வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குவதுடன், ஸ்மார்ட் சிட்டி கட்டமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாகவும், திறமையானதாகவும் மாற்றும். ஆனால் ஆரம்பத்தில் அதிக விலை மற்றும் சட்ட சிக்கல்கள், பாதுகாப்பு குறித்த கேள்விகள் போன்றவை சவால்களாக உள்ளன.

2. ஹைபர்லூப் (Hyperloop):

ஹைப்பர் லூப் என்பது காற்றில்லா குழாய்களுக்குள், காந்த விசை மூலம், விமான வேகத்தில் மனிதர்களையும், பொருட்களையும் கொண்டு செல்லும் ஒரு அதிநவீன, எதிர்கால போக்குவரத்து முறையாகும். இது விமானத்தை விட வேகமாக நிலத்தில் பயணம் செய்ய உதவுகிறது. இந்தியாவில் சென்னை ஐஐடி போன்ற நிறுவனங்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இது எதிர்கால போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தம் மிதவை (Magnetic Levitation) மற்றும் வெற்றிடக் குழாய்களைப் பயன்படுத்தி, அதிவேகத்தில் பயணிகள் அல்லது சரக்குகளை கொண்டு செல்லும் ஒரு புரட்சிகரமான போக்குவரத்து முறையாகும். இந்த அதிநவீன போக்குவரத்து உலக போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

3. ட்ரோன் டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் (Drone taxis and buses)

மின்சாரத்தால் இயங்கும் ஆளில்லாத வானூர்திகள் (Drones) மக்களை நகர்ப்புறங்களில் குறுகிய தூரங்களுக்கு அழைத்துச் செல்லவும், பொருட்களை விரைவாக வழங்கவும் பயன்படும். இது 'நகர்ப்புற வான்வழி இயக்கத்திறன்'(Urban Air Mobility) எனப்படும்.

ட்ரோன் டாக்ஸிகள்(பறக்கும் டாக்ஸிகள்) சாலை நெரிசலை தவிர்த்து, விரைவான தனிப்பட்ட பயணங்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இவை இன்னும் சோதனை மற்றும் மேம்பாட்டில் இருந்தாலும் இந்திய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டிற்கான ஒரு புதுமையான தீர்வாக பார்க்கப்படுகின்றது. இதில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ஏர் டாக்ஸிகள் குறித்த திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.

4. ஸ்மார்ட் மொபிலிட்டி(smart mobility) மற்றும் இணைக்கப்பட்ட வாகனங்கள் (Connected Vehicles)

ஸ்மார்ட் மொபிலிட்டி என்பது 4G/5G, AI, loT போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாகனங்கள், ஓட்டுநர்கள், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் உலகம் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தி, போக்குவரத்தை பாதுகாப்பாகவும், திறமையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றுவதாகும். இதில் இணைக்கப்பட்ட வாகனங்கள்(Connected Vehicles) முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று மற்றும் சாலைகளுடன் பேசி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
பெர்முடா முக்கோணத்தின் மர்மம் முடிவுக்கு வந்தது? பூமிக்கு அடியில் சிக்கிய பிரம்மாண்டம்!
Transport Technology

செயற்கை நுண்ணறிவு(AI), இணையம்- ஆஃப்-தி-திங்ஸ்(loT) மற்றும் 5G தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவது. இது ஸ்மார்ட் பேருந்து வழிகள், நிகழ்நேர போக்குவரத்து மேலாண்மை மற்றும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. இந்த தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் நமது பயண முறையை முழுமையாக மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com