வாட்ஸ்அப் புதிய அப்டேட், இனி இலவசமாக பயன்படுத்த முடியாது!
வாட்ஸ்அப்பில் புதியதாய் வந்துள்ள Backup அப்டேட் அதன் பயனர்களை அதிருப்தியில் அழ்த்தியுள்ளது. அதாவது இனி வாட்ஸ்அப்பில் 15 ஜிபி மட்டுமே Backup எடுக்க முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரை மக்கள் தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகளை பயன்படுத்தி இருந்தாலும், அவை அனைத்திற்கும் முன்னுதாரணமாக விளங்கி மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது வாட்ஸ்அப் செயலிதான். தொடக்கத்தில் வெறும் மெசேஜ்கள் அனுப்பும் நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, தற்போது நம்முடைய பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடித்துவிடும் அளவுக்கு மேம்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, எல்லா அப்டேட்களும் அட்டகாசமாக இருந்து வருகிறது.
அதன் வரிசையில் தற்போது புதிதாக ஒரு அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இதுவரை வாட்ஸ்அப்பில் பேக்கப் எடுப்பதற்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத நிலையில், தற்போது வெறும் 15 ஜிபி வரை மட்டுமே பேக்அப் எடுக்க முடியும் என்ற புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளது.
ஏற்கனவே பல நிறுவனங்கள் தாங்கள் இதுவரை வழங்கி வந்த இலவச சேவைகளை நிறுத்திவிட்டு சந்தா முறையை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், வாட்ஸ்அப்பும் இதில் களமிறங்கியுள்ளது.
சாதனத்தில் 15ஜிபிகளுக்கு மேல் வாட்ஸ்அப் தரவுகள் அதிகமாக இருந்தால் அவை அனைத்தும் டெலிட் செய்யப்படும். இல்லையெனில் கூடுதல் டேட்டாக்களை சேமிப்பதற்கு மாதா மாதம் சந்தா செலுத்த வேண்டும். இந்த புதிய அம்சம் முதலில் பீட்டா வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.