அதிகரிக்கும் WhatsApp மோசடிகள்.. இவற்றை செய்தால் சிக்காமல் தப்பிக்கலாம்!

WhatsApp Scam.
WhatsApp Scam.

உலக அளவில் வாட்ஸ் அப் செயலியை பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த மெசேஜிங் தளத்தில் மோசடிகளும் அதிக அளவில் நடந்து வருகிறது. மோசடிக்காரர்கள் பல்வேறு விதமான யுக்திகளைப் பயன்படுத்தி WhatsApp பயனர்களை குறிவைத்து பணத்தை ஏமாற்றுகின்றனர்.

இத்தகைய வாட்ஸப் மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

தேவையில்லாத லிங்குகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்: பெரும்பாலான மோசடிக்காரர்கள் தங்களை ஒரு தலைசிறந்த நிறுவனம், வங்கி அல்லது அரசு சார்ந்த நிறுவனமாகக் காட்டிக் கொண்டு பயனர்களை ஏமாற்றுவதற்கு மெசேஜ் மூலமாக லிங்க் அனுப்பி விவரங்களை சரி பார்க்கும் முயற்சியை மேற்கொள்வார்கள். ஒருபோதும் இப்படி வரும் லிங்குகளை தொட்டு உள்ளே செல்ல வேண்டாம். குறிப்பாக வாட்ஸ் அப்பில் வரும் எந்த லிங்க்காக இருந்தாலும் அதை தொடுவதற்கு முன் பலமுறை யோசித்து முடிவெடுங்கள். 

முன்பின் தெரியாத நபர்களிடம் ஜாக்கிரதை: திடீரென புதிய எண்ணில் இருந்து உங்களுக்கு மெசேஜ் வந்தால் ஜாக்கிரதியாக இருங்கள். குறிப்பாக வெளிநாட்டு எண்களில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் குறுஞ்செய்திகள் வந்தால் பதில் அளிக்க வேண்டாம். இதில் சற்று கவனமாகவே இருங்கள்.

உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம்: யாராவது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை கேட்கிறார்கள் என்றால், அப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுடைய வங்கி அக்கவுண்ட் விவரங்கள், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்டு எண்கள் போன்ற விவரங்களை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்யாதீர்கள். ஏனெனில் மோசடிக்காரர்கள் இந்த விவரங்களை பயன்படுத்தி உங்களது பணத்தை திருட வாய்ப்புள்ளது. சிலர் உங்களது அடையாளத்தை திருடி வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. 

ரிவார்டுகளை நம்பாதீர்கள்: வாட்ஸ் அப் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் இந்த ரிவார்டு கொள்ளை அதிகமாக நடக்கிறது. நீங்கள் இத்தனை லட்சம் வென்றிருக்கிறீர்கள், எனவே உங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என மோசடிக்காரர்கள் ஆசை வலையில் உங்களை விழ வைப்பார்கள். பின்னர் அதற்கு பிராசசிங் பணம் கட்ட வேண்டும் எனக் கூறி ஒரு தொகையை உங்களிடம் பறித்துக் கொண்டு மாயமாக மறந்து விடுவார்கள். எனவே எந்த விதமான ரிவார்ட் ஆஃபர்களையும் நம்பாதீர்கள். 

உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை பாதுகாப்பாக வைப்பதற்கு 2 Factor Authentication எனேபிள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். மேலும் அவ்வப்போது உங்களுடைய WhatsApp அப்ளிகேஷனை அப்டேட் செய்து கொள்வது நல்லது. சமீபத்திய அம்சங்கள் மூலமாக உங்கள் கணக்கு மேலும் பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
WhatsApp சீக்ரெட் கோட் அம்சம். இனி உங்கள் Chat-ஐ யாராலும் பார்க்க முடியாது!
WhatsApp Scam.

இவை அனைத்தையும் மீறி உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடந்தால் உடனடியாக புகார் அளியுங்கள். உங்கள் வாட்ஸ் அப் கணக்கிலேயே ரிப்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அதையும் மீறி ஒருவேளை நீங்கள் பணத்தை இழந்துவிட்டால், உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையம் சென்று தைரியமாக புகார் கொடுங்கள். ஏனெனில் எவ்வளவு சீக்கிரம் நீங்கள் புகார் கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போலீசாருக்கு எளிதாக இருக்கும். 

எனவே எதைப் பற்றியும் பயப்படாமல் தைரியமாக செயல்படுங்கள். மேற்கூறிய எல்லா விஷயங்களையும் பின்பற்றினால் வாட்ஸ் அப்பில் நடக்கும் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com