WhatsApp பயனர்கள் எச்சரிக்கை!

WhatsApp users alert
WhatsApp users alert

whatsapp தொடர்பான வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஏர்டெல் வோடபோன், ஜியோ போன்ற நிறுவனங்களின் காலாவதியான மொபைல் எண்களை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது.

அதாவது ஒரு நபர் நீண்ட நாட்களாக தன் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால், அந்த மொபைல் எண் வேறொரு நபருக்கு கொடுக்கப்படும். இப்படி நடக்கும் பட்சத்தில் அந்த எண்ணில் வாட்ஸ் அப் பயன்படுத்திய நபருக்கு இதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இத்தகைய குழப்பமான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தன் நிலைபாட்டை விவரித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலிழந்த மொபைல் நம்பரை வேறு ஒருவருக்கு கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டது. மேலும் டெலிகாம் நிறுவனங்கள் காலாவதியான மொபைல் நம்பரை வேறு யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என தீர்ப்பளித்துள்ளனர். 

இந்த தீர்ப்பால் whatsapp பயனர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே உங்களுடைய வாட்சப் எண் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்றால், அந்த மொபைல் எண்ணில் வாட்ஸ் அப் பயன்படுத்துவதை நிறுத்திய உடன் உடனடியாக அதன் டேட்டாக்கள் அனைத்தையும் டெலிட் செய்வது அவசியம். இத்தகைய டேட்டாக்கள் தவறாக பயன்படுத்துவதற்கு அதன் பயனர்களை பொறுப்பேற்பார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. எனவே பயனர்கள் அவர்களுடைய டேட்டாக்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதற்கு அவர்கள்தான் அவர்களின் பிரைவசியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிரடியாகக் கூறியுள்ளது.

டெலிகாம் நிறுவன விதிப்படி ஒரு மொபைல் எண் ரீசார்ஜ் செய்யப்படாமல் இருந்தால், அந்த மொபைல் எண் செயலிழக்கச் செய்த 90 நாட்களுக்கு வேறு நபருக்கு வழங்கக்கூடாது. இதை சுட்டிக்காட்டியே உச்ச நீதிமன்றமும் இத்தகைய தீர்ப்பை கூறியுள்ளது. ஆனால் வேறு நபருக்கு அந்த நம்பரை கொடுக்கவேகூடாது என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

எனவே நீங்கள் நீண்ட நாட்கள் whatsapp பயன்படுத்திய ஒரு நம்பரை இனி பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதில் உள்ள தரவுகளை முழுவதும் அழித்துவிடுவது நல்லது. அப்போதுதான் அந்த நம்பர் மற்றொரு நபருக்கு செல்லும்போது அந்த தரவுகளை அவர் மீட்டெடுக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். எனவே வாட்ஸ் அப் பயனர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com