பெரும்பாலான விமானங்கள் ஏன் வெள்ளையாக இருக்கின்றன? அறிவியல் பின்னணி!

விமானங்களின் நிறத்திற்கு பின்னால் உள்ள வெப்ப மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு இரகசியங்கள்.
விமானங்களின் நிறம் - Airplane Colors,
விமானங்களின் நிறம் - Airplane Colors,
Updated on

விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதன் மூலம் வெப்பம் குறைதல், எரிபொருள் சேமிப்பு, பராமரிப்பு எளிதாகும். பெயிண்ட் எடையால் விமானத்தின் எடை 544 கிலோ வரை அதிகரித்து, 8 பயணிகளுக்கு சமமான சுமை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வெள்ளை நிறம் தேர்வு செய்யப்படுகிறது. அதேசமயம், சில நிறுவனங்கள் பிராண்ட் அடையாளம், மனநிலை தாக்கம், கலை வடிவமைப்பு காரணங்களால் கருப்பு, நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு, தங்க நிறங்களையும் பயன் படுத்துகின்றன.

உலகளவில் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது. இதனால் விமானத்தின் மேற்பரப்பில் அதிக வெப்பம் உறிஞ்சப்படாமல் இருக்கிறது. இதனால் விமானம் சூடாகாமல் தவிர்ப்பதோடு, குளிரூட்டும் அமைப்புக்கு அதிக சுமை ஏற்படாது.

விமானங்களின் நிறம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் வெளிப்புறத்தில் ஏற்படும் சிறிய சேதங்கள், விரிசல்களை கூட பாதுகாப்பு சோதனையின்போது பராமரிப்பு குழுவினரால் எளிதாக கண்டறிய முடியும். சூரிய ஒளியில் வெள்ளை நிறம் மற்ற நிறங்களைவிட குறைவாகவே மங்குவதால், விமானத்திற்கு மீண்டும் மீண்டும் வண்ணம் பூசப்பட வேண்டிய நிலை ஏற்படாது.

வெள்ளை நிறத்தை தவிர வேறு நிறங்களை விமானங்களில் பயன்படுத்தினால் அதன் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதாவது, பெயிண்ட் காரணமாக ஒரு விமானத்தின் எடையானது 273 முதல் 544 கிலோகிராம் வரை அதிகரிக்கிறது. இந்த தகவலை உலகப்புகழ் பெற்ற போயிங் நிறுவனத்தினுடைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தின் எடை அதிகரித்தால் அதிக எரிபொருள் தேவை ஏற்படும் நிலை உண்டாகும்.

544 கிலோ என்பது 8 பயணிகளுக்கு சமமானது. இந்த பிரச்சனையை ஓரளவிற்கு சமாளிப்பதற்காகவே வெள்ளை நிறத்தை பயன்படுத்துகின்றனர். பழைய வெள்ளை நிற விமானங்களை வாங்கினாலும் மீண்டும் பெயிண்ட் செலவு செய்ய தேவையில்லை. இதனாலேயே பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெள்ளை நிறத்தையே தேர்வு செய்கின்றன.

பொதுவாக பெரும்பாலான விமானங்களின் அளவு மற்றும் நிறுவனத்தின் லோகோ வேறு வேறாக இருந்தாலும், பெரும்பாலானவை வெள்ளை நிறத்திலே இருக்கும். ஆனால் எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. அரிதாக ஒரு சில விமானங்கள் கருப்பு, நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு மற்றும் தங்க நிறங்களில் உள்ளது.

விமானங்களின் நிறம் - Airplane Colors,
விமானங்களின் நிறம் - Airplane Colors,

1973-ம் ஆண்டு அமெரிக்காவின் பிரானிஃப் இன்டர் நேஷனல் ஏர்வேஸ் (Braniff International Airways) விமான நிறுவனம், புகழ்பெற்ற கலைஞர் அலெக்சாண்டர் கால்டர் (Alexander Calder) என்பவரைக் கொண்டு முழுமையாக வண்ணங்கள் தீட்டப்பட்ட டக்ளஸ் DC-8 (Douglas DC-8) ஜெட் விமானத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு "ஃப்ளையிங் கலர்ஸ்" (Flying Colors) என்று பெயரிடப்பட்டது.

இதுவே உலகின் முதல் முழுமையான வண்ணக் கலை வடிவமைப்புடன் பறந்த பிரபல விமானமாகும். ஏர்கால் மற்றும் பசிபிக் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள், 1970கள் மற்றும் 1980கள் முழுவதும் தங்கள் விமானங்களின் முகப்புகளில் பிரகாசமான இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களைப் பயன்படுத்தின. இதுவே தற்போதைய பல வண்ணமயமான விமானங்கள் வானில் பறப்பதற்கு ஆரம்பப் புள்ளி.

இதையும் படியுங்கள்:
விமான ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன? பின்னணியில் உள்ள அதிர்ச்சி தரும் அறிவியல் உண்மை!
விமானங்களின் நிறம் - Airplane Colors,

கருப்பு நிற விமானங்கள்: உலக விமானங்கள் பொதுவாக வெள்ளை நிறத்தில் இருப்பதை விட்டு விட்டு, நியூசிலாந்தைச் சேர்ந்த ஏர் நியூசிலாந்து விமானங்கள், தனித்துவமாக கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணி, நாட்டின் புகழ்பெற்ற ரக்பி அணி ‘ஆல் பிளாக்ஸ்’ அணியின் அடையாளத்தோடு தொடர்புடையது.

உலகளவில் ரக்பியில் நியூசிலாந்தின் பெருமையை 2011 ம் ஆண்டு நிலைநாட்டிய இந்த அணி, திறமை, ஒற்றுமை, சக்தி மற்றும் ஆற்றல் மூலம் நாட்டின் பெயரை பிரபலப் படுத்தியது. அதை பெருமைப்படுத்தும் விதமாக அந்த அணியின் சீருடை நிறமான கருப்பு நிறத்தில் தங்களது விமானங்களை 2013 ம் ஆண்டு ஏர் நியூசிலாந்து அறிமுகப்படுத்தியது.

விமான நிறுவனங்களின் அடையாளத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் நிறம் நீலநிறம் .உளவியலில், நீல நிறம் நிலைத்தன்மை மற்றும் தொழில்முறையுடன் தொடர்புடையது. பயணி "பாதுகாப்பாக இருக்கிறார் "என்பதை நீல நிறம் ஆழ்மனதில் உணர்த்துகிறது. இது நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் உணர்த்துவதாலும், பயணிகளுக்கு அமைதியைத் தருவதாலும் பல முண்ணனி நிறுவனங்கள் தங்களது விமானங்களுக்கு நீல நிறத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

விமானப் பயணம் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். நீல நிறச் சூழல்கள் இதயத் துடிப்பைக் குறைத்து, பதட்டத்தையும் தணிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இதனால்தான் விமானத்தின் இருக்கைகள் பெரும்பாலும் நீல நிறத்தில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆகாயத்தின் ராணி 'போயிங் 747': உலகைப் புரட்டிப்போட்ட ஒரு ஜம்போ ஜெட் கதை!
விமானங்களின் நிறம் - Airplane Colors,

நீலம் ஒரு உயர் தர நிறமாகக் கருதப்படுவதால், உயர்தரப் பயணிகளை இலக்காகக் கொண்ட பாரம்பரிய விமான நிறுவனங்களான லுஃப்தான்சா, KLM ராயல் ஏர்லைன்ஸ், ஜெட் புளு ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் போன்ற நிறுவனங்களால் நீலநிற விமானங்கள் பயன்படுத்தப் படுகிறது.

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ், தனது பிராண்ட் அங்கீகாரத்தை மேம்படுத்தவும் வேறுபடுத்திக்காட்டவும், 2014-ஆம் ஆண்டில் பிரகாசமான மஞ்சள் நிற விமானங்களை அறிமுகப்படுத்தியது. ஏர் ஆசியா, குண்டாஸ் (Qantas), துருக்கி ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ்,விர்ஜின் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் சிகப்பு நிற விமானங்களை தங்களது நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

S7 ஏர்லைன்ஸ், அயர்லாந்து நாட்டின் ஏக்ஸ் லிங் விமானங்கள், ஜெர்மன் தலைநகர் தலைமையிடமாகக் கொண்ட காண்டோர் (Condor) விமான நிறுவனங்கள் போன்றவை பச்சை நிற விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், பழங்கால "டெசர்ட் கோல்ட்" வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்ட ஒரு சிறப்பு போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தை தங்க நிறத்தில் இயக்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com