ரெயில் தண்டவாளம் இடையே கற்கள் இருப்பது ஏன்?

Railway track
Railway track
Published on

நீங்கள் ரெயில்களில் பலமுறை பயணம் செய்திருப்பீர்கள். இந்தப் பயணத்தின் போது ரயில் பாதையில் கற்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த கற்களுக்கும் ரயிலின் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை, இன்று அதன் பின்னணியில் உள்ள காரணத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

  • ரெயில் தண்டவாளங்களில் கூர்மையான கற்கள் இருப்பதை பார்த்திருப்போம். இந்த கற்கள் `டிராக் பாலாஸ்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. ரெயில் தாண்டவாளங்களுக்கு இடையில் பாலாஸ்ட் எனப்படும் உடைந்த கற்கள் போடப்பட்டிருப்பதை காணலாம். இந்த கற்கள் சத்தம் மற்றும் அதிர்வுகளை உறிஞ்சுவதால், ரயிலில் அமர்ந்திருப்பவர்களும், வெளியில் நிற்பவர்களும் அதிக சத்தத்தில் இருந்து தப்பிக்கின்றனர்.

  • இரு தண்டவாளங்களுக்கு இடையில் கான்கிரீட்டால் ஆன ஸ்லீப்பர்கள் (கான்கிரீட் பீம்கள்) பொருத்தப்பட்டுள்ளன. பாதையில் உள்ள கற்கள் அந்த பீம்களை அகன்றுவிடாமல் தடுக்கின்றன. அவ்வாறு செய்யாவிட்டால், ரயில் தடம் புரண்டு, பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கற்கள், தண்டவாளத்தின் மண் மூழ்காமல் தடுப்பதுடன், தண்டவாளத்தில் புதர்கள் வளராமல் தடுக்கிறது.

  • கூழாங்கற்கள் போன்ற கற்களை பயன்படுத்தினால் ரெயில் கடக்கும்போது அவை ஒன்றுடன் ஒன்று சறுக்கும். அதிகம் நகராத கற்களே ரெயில் பாதைகளுக்கு ஏற்றது. கூர்மையான விளிம்புகள் கொண்ட இந்த கற்கள் தண்டவாளத்தை சரியான இடத்தில் நிலை நிறுத்த உதவுகின்றன. ரயில்கள் இரும்பு பெட்டிகளால் உருவாக்கப்படுவதால் அதிக எடையுடன் இருக்கும். இதனால், ரயில்கள் செல்லும்போது தண்டவாளங்கள் விலகாமல் இருக்க கற்கள் நிரப்பப்படுகின்றன.

  • இந்த கற்களானது ரெயில் பாதைகளில் தாவரங்கள் வளர அனுமதிக்காது. இதனால் தண்டவாளங்களில் ரெயில் இடையூறு இல்லாமல் செல்ல முடியும்.

  • டிராக் பாலாஸ்ட், ரெயில் பாதையில் தண்ணீர் அடைவதைத் தடுக்கிறது. இது முற்றிலும் தடுக்காது என்றாலும், தண்டவாளத்தின் அடியில் அல்லது அதைச் சுற்றி சரியான வடிகால் வசதியை வழங்கி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்க ஸ்மார்ட் ஃபோனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டி இருக்கீங்களா? இத முதலில் தெரிஞ்சுக்கோங்க! 
Railway track
  • தண்டவாளத்தின் மீது ரெயில்கள் கடந்து செல்லும்போது கடுமையான அதிர்வுகள் ஏற்படுகிறது. இந்த அதிர்வுகள் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த கூர்மையான கற்கள் தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகளை சற்று குறைக்கிறது.

  • தண்டவாளத்தின் மீது ரெயில்கள் செல்லும்போது அழுத்தம் காரணமாக தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு கற்கள் நிரப்பப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com