அதிக வெப்பம் மின்னணு சாதனங்களுக்கு பல நேரங்களில் தீங்கு விளைவிக்கும். உங்கள் கேஜெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அதிக வெப்பமடைவதைத் தடுக்க உதவும் சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்
1. நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்பத்தை தவிர்க்கவும்:
அதிக வெப்பமான காலநிலையில் உங்கள் மின்னணு சாதனங்களை வெளியில் பயன்படுத்த வேண்டாம். சூடான காற்று உங்கள் கேஜெட்டை கொஞ்சம்கூட குளிர்விக்காது.
உங்கள் சாதனங்களை நேரடியாக சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைக்கவும். ஏனெனில், அது அவற்றின் வெப்பநிலையை இன்னும் அதிகரிக்கும்.
உங்கள் கார் வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில், உங்கள் கேஜெட்கள் எல்லாம் உபயோகத்தில் இல்லாமல் இருந்தாலும், காரின் உள்ளே வைப்பதை தவிர்த்திடுங்கள்.
2. கூலிங் பேட் அல்லது லேப்டாப் ஸ்டாண்டைப் பயன்படுத்தவும்:
நீங்கள் வெப்பமான சூழலில் நீண்ட நேரம் மடிக்கணினியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், கூலிங் பேடைப் பயன்படுத்துங்கள், சாதனத்தின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த இந்த பேட்கள் கூடுதல் வெப்ப வெளியேற்றத்தை கொண்டிருக்கும்.
உங்கள் லேப்டாப்பை உயர்த்தப்பட்ட மேடையில் வைக்கவும் அல்லது லேப்டாப் ஸ்டாண்டில் வையுங்கள். உங்கள் லேப்டாப் மற்றும் டேபிளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு காற்று சுழற்சி சிறப்பாக இருக்கும்.
3. சுவாசிக்க இடம் கொடுங்கள்:
உங்கள் சாதனத்தைச் சுற்றி விசாலானமான இடைவெளி இருப்பதை உறுதிசெய்யவும். இது சாதனத்தின் வெப்பத்தை சுலபமாக வெளியேற அனுமதிக்கிறது.
ரேடியேட்டர்கள், ஓவன்கள் அல்லது பர்னர்கள் போன்ற வெப்பத்தில் இயங்கும் பொருள்களுக்கு அருகில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இயங்குவதைத் தவிர்க்கவும்.
4. முடிந்தவரை சுத்தமாக வைத்திருங்கள்
உங்கள் சாதனத்தின் உள்ளே தூசி மற்றும் குப்பைகள் குவிந்து, காற்றோட்டத்தைத் தடுத்து, அதிக வெப்பமடையச் செய்யும். அதனால் துவாரங்கள்(Vents) மற்றும் மின்விசிறிகளை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
துவாரங்கள்(Vents) பக்கத்தில் பொருட்கள் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. (Over Clocking) ஓவர் க்ளாக்கிங்கை ஆப் செய்யுங்கள் அல்லது குறைந்த சக்தி பயன்முறையைப்(Low power mode) பயன்படுத்தவும்:
ஓவர் க்ளாக்கிங் அதிக வெப்பத்தை உருவாக்கலாம். உங்கள் சாதனத்தை ஓவர் க்ளோக்கிங் செய்திருந்தால், இயல்புநிலை பயன்படுத்தும் முறைக்கு(default settings) மாற்றிவிடுங்கள்.
ஆற்றல் சேமிப்பு மற்றும் வெப்ப உற்பத்தியைக் குறைக்க முடிந்தவரை குறைந்த-சக்தி இயங்கும் முறைகளைப் பயன்படுத்தவும்.
6. பயன்படுத்தப்படாத அல்லது பின்னணி அம்சங்களை முடக்குங்கள்:
தேவையில்லாத போது ஜிபிஎஸ், புளூடூத் மற்றும் வைஃபை போன்ற அம்சங்களை முடக்கவும். இவை வெப்பத்தை அதிகரிக்கலாம்.
உங்கள் சாதனத்தில் பணிச்சுமையை குறைக்க தேவையற்ற பின்னணி பயன்பாடுகள் மற்றும் செயல்முறைகளை முடக்கவும்.
7. இடைவேளை எடுங்கள்:
நீங்கள் ஒரு சாதனத்தை தீவிரமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை குளிர்விக்க இடைவெளிகளைக் கொடுங்கள். அவ்வப்போது அதை அணைக்கவும். அல்லது, ஸ்லீப்(Sleep) பயன்முறையில் வைக்கவும்.
வெப்ப உணர்திறன் கேஜெட்டுகள் குளிரூட்டப்பட்ட இடங்களில் அல்லது அவற்றை நேரடியாக குளிரூட்டப்படும் விசிறியுடன் பயன்படுத்த வேண்டும்.