டயர் ஏங்க கருப்பா இருக்கு!

Tire
Tire
Published on

வாகனம் இல்லாத வீடு இல்லை. டயர் இல்லாத வண்டியில்லை. வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரே பாகம் டயர்கள்தான். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணங்களை காண்போம்.

கடந்த 1895ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் டயர் வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. ஏனெனில் தூய்மையான ரப்பரால் இது உருவாக்கப்பட்டது. பால் போன்ற வெள்ளை நிறம்தான் (Milky White) ரப்பரின் இயற்கையான வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிற டயர்கள் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கவில்லை. அத்துடன் அவை திடமாகவும் இல்லை. இதுமட்டுமல்லாது வெப்பத்தை எதிர்க்கும் திறனும் அவற்றுக்கு மிகவும் குறைவாகவே இருந்தது. அதாவது 100 கிலோ மீட்டர்கள் முதல் 200 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே அவற்றின் ஆயுட்காலம்.

நவீன கால டயர்கள் அனைத்தும் கடினமாக உள்ளன. நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கின்றன. மிகவும் திடமாகவும் இருக்கின்றன. அத்துடன் வெப்பத்தையும் நன்கு தாங்குகின்றன. ஒட்டுமொத்தத்தில் அவை வலுவாக உள்ளன. மழையாலும் அவை பாதிக்கப்படுவதில்லை. அத்துடன் சாலைகளில் நமக்கு நல்ல 'க்ரிப்பை' அவை வழங்குகின்றன.

கார்பன் பிளாக் (CARBON BLACK) என்ற வேதி சேர்மத்தை தூய்மையான ரப்பருடன் கலப்பதால்தான் நமக்கு இவ்வாறான அருமையான டயர்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாகதான் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. அதாவது வல்கனைசேஷன் (Vulcanization) செயல்முறையின் போது, சல்பருடன் சேர்த்து வேறு எந்த மெட்டீரியலை காட்டிலும் மலிவான கார்பன் பிளாக் தூய ரப்பருடன் கலக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
வாகனத்தின் டயர் நீண்ட காலம் உழைக்க பெஸ்ட் டிப்ஸ்!
Tire

கருப்பு வண்ணம் காரணமாக டயர்கள் விரைவாக சேதமடைவதும் தவிர்க்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு நன்மைகள் கிடைப்பதன் காரணமாகதான் நாம் கருப்பு வண்ண டயர்களுக்கு மாறி விட்டோம். அதற்காக உலகில் வேறு எந்த வண்ணத்திலும் டயர்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது இதற்கு அர்த்தம் கிடையாது.

கருப்பு வண்ண டயர்கள்தான் உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அவைதான் பிரபலமாகவும் உள்ளன. கலர்புல் டயர்களுடன் கூடிய கார்களும் கூட இருக்கலாம். ஆனால் தினசரி ஓட்டுவதற்கு உகந்ததாக அவை இருக்காது. கருப்பு வண்ண டயர்களே நீண்ட உழைப்பிற்கு உத்தரவாதம் என்பது உண்மைதானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com