கேட்டதை கொடுப்பவனே விக்கி! தேடலின் நாயகனே விக்கி!

Wikipedia logo representing free global knowledge
Wikipedia logo representing free global knowledge | Wikipedia HistoryImage credit: AI image
Published on

எந்த துறையிலும் எந்தவிதமான தகவல்களையும் நம்பகத்தன்மையுடன் பெற எல்லோரும் நாடும் இடம் விக்கிப்பீடியா தான். மாறிக்கொண்டும் வளர்ந்துக்கொண்டும் இருக்கும் சமூகத்திற்குத் தகவல்கள் அறியும் தேவையும், தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது . இந்த இரண்டு நோக்கத்தையும் மனதில் கொண்டு உருவானதே விக்கிப்பீடியா (Wikipedia History) என்ற நிறுவனம்.

விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். ஆர்வமுள்ள எவரும் இதனைப் பயன்படுத்தவும், இதில் பங்களிக்கவும் இயலும். இந்த நிறுவனத்தை 15, ஜனவரி, 2001 ஆம் ஆண்டு தொடங்கியதால், இருபத்தைந்து வருடங்கள் கடந்தும் இது சேவையாற்றி வருகிறது.

ஹவாய் மொழியில் விக்கி என்றால் "விரைவு" எனப் பொருள்படும் சொல்லிலிருந்தும், கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து ‘பீடியா’ என்ற சொல்லும் பெறப்பட்டு, விக்கிப்பீடியா என்று பெயரிடப்பட்டது. விரைந்து உருவாகும் கலைக்களஞ்சியம் என்பதே இதன் பொருளும் நோக்கமும் .

இன்று 'விக்கி' என்றால் பலரும் கூட்டாக எழுதுவதை ஏற்கும் மென்பொருள் கொண்டு இயங்கும் வலைத்தளம் அல்லது மென்பொருள் என்று பொருள். இதன் மூல மென்பொருள் மீடியாவிக்கி என்று அழைக்கப்படுகிறது. இது இணையத்தில் உள்ள எவரும், எங்கிருந்தாலும், எந்தப் பக்கத்தையும் எளிதில் 'தொகு' (Edit) என்னும் சுட்டியை (tab) சொடுக்குவதன் மூலம் மாற்ற முடியும். அச்சுக் கலைக்களஞ்சியங்கள் போலன்றி இணையத்தில் அனைவரின் அணுக்கத்தில் உள்ளதால் எப்போதும் உடனுக்குடன் புதிய தரவுகளோடு தகவமைத்துச் செயல்படுகிறது.

ஆங்கில விக்கிப்பீடியாவை ஜிம்மி வேல்ஸும், லாரி சாங்கரும் தொடங்கினார்கள். இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது. ஜனவரி 2026 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயல்படுகிறது. மொத்தமாக 9,000,000 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

தமிழ் விக்கியை 2003 ஆம் ஆண்டு இ. மயூரநாதன் துவங்கினார். இப்போது தமிழில் 1,80,231 கட்டுரைகளும், 16,000 பயனர்களும் உள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா 70 இலட்சம் சொற்கள் கொண்ட பல்துறை இணையக் கலைக்களஞ்சியம். இது நாள்தோறும் 80,000 முறை பார்க்கப்படுகின்றது. மாதத்துக்கு 2.4 மில்லியன் முறை நோக்கப்படுகிறது.

விக்கிப்பீடியா என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். இது அலெக்சா தரவரிசையில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளவில் 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.

நேச்சர் இதழ் 2005-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், இதிலுள்ள அறிவியல் கட்டுரைகள், பிரித்தானிக்கா என்சைக்ளோபீடியாவைப் (Britannica Encyclopedia) போன்றே கட்டுரைகளைப் போல் துல்லியத்தன்மை கொண்டன எனக் கண்டறியப்பட்டது.

விக்கிப்பீடியாவிற்கு முன்னதான வேறு சில இணையத்தில், கூட்டு கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவை வெற்றியடையவில்லை முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' வலைப்பக்க நிறுவனத்தால், நுபீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம், நுபீடியாவை, ஓர் இலவச இணையத்தள ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகவும் அமைப்பதாக இருந்தது. நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை, வழக்கப்படியான செய்முறைப்படி பரிசீலித்து வெளியிடுவதாகவே இத்திட்டம் அமைந்திருந்தது போமிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நுபீடியாவின் முக்கிய நபர்களாக, முதன்மைச் செயலதிகாரியான ஜிம்மி வேல்ஸ் உம் லாரி சாங்கர் இருந்தார்கள். லாரி சாங்கர், முதலில் நுபீடியாவிற்கும், பின்னர் விக்கிப்பீடியாவிற்கும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களுக்கான அரிய தகவல்களைத் தேடித் தரும் இணையத் தேடுபொறி!
Wikipedia logo representing free global knowledge

"அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது; பக்கச் சார்பற்றது; நடுநிலைமையை வலியுறுத்துவது.

நீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இணைய, தமிழ் விக்கிப்பீடியா சமூகம் எப்போதும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com