இன்னும் நான்கு வருடங்களில் Time Travel இயந்திரம் வந்துவிடுமா? சக்கப்போடு!

Time Travel Machine
Time Travel Machine
Published on

Time Travel சாத்தியமா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், சமூக வலைத்தளங்களில் வரும் 2028ம் ஆண்டு Time Travel இயந்திரம் உருவாக்கப்பட்டுவிடும் என்று ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தகவல் கசிந்ததாக தகவல் பரவி வருகிறது. Time Travel இன்னும் நான்கே வருடங்களில் கண்டுபிடிக்கப்படுவது சாத்தியமா?

Time Travel பற்றி ஏராளமான படங்கள் வந்துவிட்டன. படங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட மக்களும் எப்போது உண்மையாக அந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்படும் என்ற ஆர்வத்துடன் உள்ளனர். கண்டுபிடித்தால் என்ன செய்ய முடியும்? சிலர் "நான் பிறந்திருக்காதப்படி செய்துவிடுவேன்", சிலர் "என் தலையெழுத்தை மாற்றி எழுதுவேன்" என்றெல்லாம் கூறுவார்கள். Time Travel லால் காலத்தை கடக்க முடியுமே தவிர, ஒரு விஷயத்தை மாற்றமுடியுமா என்ன?

Time Travel இயந்திரம் வந்துவிட்டால், இதுப்போன்ற பல கேள்விகளுக்கு விடைத் தெரிந்துவிடும்.

Time Travel சாத்தியமா?

நம் வாழ்க்கையில் சாதாரணமாக பார்க்கும் ஒளியானது ஒரு விநாடிக்கு தோராயமாக 3 லட்சம் கி.மீ வரை பயணிக்கும். மனிதர்கள் இந்த வேகத்தில் போனால் என்ன ஆகும்? என்று ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள தொடங்கினார்கள். இப்படியான ஆய்வுகளில் ஒளியின் வேகத்தில் சென்றால் காலப்பயணம் சாத்தியம் என்று ஆய்வுகள் தெரிவிக்க, பலரும் அதற்கு முயற்சித்தனர். ஆனால் எவ்வளவுதான் முயன்றாலும், குறிப்பிட்ட வேகத்தை மனிதர்களால் கடக்க முடியவில்லை.

இது ஏன் என்று அனைவரும் யோசிக்கும் நேரத்தில், ஐன்ஸ்டீன் ஒரு விளக்கமளிக்கிறார். "நீங்க எவ்வளவுதான் முயன்றாலும் ஒளியின் வேகத்திற்கு போக முடியாது." என்று அடித்து சொன்னார். அது ஏன் என்று அனைவரும் கேட்கும்போது, 10 கி.மீ வேகத்தில் நின்றுக்கொண்டிருக்கும் மற்றொரு ரயில் மீது மோதினால் பாதிப்பு எப்படி இருக்கும்?

நிச்சயம் பாதிப்பு குறைவாகதான் இருக்கும். காரணம் ரயில் மெதுவாக செல்கிறது. ஆனால் இதே ரயில் 100 கி.மீ வேகத்தில் மோதினால்? நிச்சயம் பேரழிவு உண்டாகும். இதற்கு காரணம் ரயிலின் வேகம்தான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த பேரழிவுக்கு காரணம் ரயிலின் எடைதான் என்று அவர் கூறினார். ஒரு பொருள் எவ்வளவு வேகத்தில் போகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதன் எடை அதிகரிக்கும். எனவேதான் பாதிப்பும் அதிகமாகிறது.

அதாவது வெயிட் அதிகமாக இருக்கும் பொருளை நகர்த்த கூடுதல் பவர் தேவை. பவர் சும்மா கிடைக்காது, ரயிலில் நிலக்கரி இருந்தால்தான் கூடுதல் பவர் கிடைக்கும். அப்படி எனில் கூடுதல் எரிபொருள் எடுத்து செல்ல ரயிலில் கூடுதல் பெட்டியை சேர்க்க வேண்டி இருக்கும்.

இப்படியாக ரயிலில் எவ்வளவு கூடுதல் பெட்டிகளை சேர்த்து ரயிலின் வேகத்தை கூட்டினாலும், கூடுதலாக சேர்க்கப்பட்ட பெட்டியின் எடை இந்த வேகத்தை குறைத்துவிடும். எனவே நம்மால் ஒளியின் வேகத்திற்கு போக முடியாது என்று விளக்கினார். இதனுடைய எளிய ஃபார்முலாதான் E=mc2.

இதன்பின்னர் செய்ய முடியாததை சாத்தியமாக்க பலர் போராடினர். ஆனால், அவர் சொன்னதை உணரத் தொடங்கிய ஆராய்ச்சியாளர்கள், இதை விட்டுவிட எண்ணினர்.

அப்போது மீண்டும் ஐன்ஸ்டீன் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்தது 'வாம்ஹோல்' (wormholes). 1935 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் நாதன் ரோசன் ஆகியோர் சேர்ந்து இதனை கோட்பாட்டு ரீதியாக கண்டுபிடித்தனர். இவர் கண்டுபிடித்த இந்த வாம்ஹோல் வழியாக காலப்பயணம் சாத்தியம் என்று கூறப்பட்டது. ஒளி, ஒளியின் வேகம், டைம் ட்ராவல், வாம்ஹோல் என அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார்.

இதையும் படியுங்கள்:
BLOCKCHAIN & CRYPTOCURRENCY - டிஜிட்டல் யுகத்தின் எதிர்காலம்!
Time Travel Machine

ஆனால், முழுமையாக Time travel இயந்திரம் இன்றும் கண்டுபிடிக்கவில்லை.

டை ட்ராவலில் ஸ்டீபன் ஹாக்கிங் சில விஷயங்களை கண்டுபிடித்தார். அதாவது ஒளியின் வேகத்தில் போனால் மனிதர்களுக்கு வயதாகாது. இதே ஒளியை விட வேகமாக போனால் மனிதர்கள் தங்களுடைய இறந்த காலத்திற்கு செல்லலாம். அனைவரின் கண்டுபிடிப்புகளையும் சேர்த்துப் பார்த்தால், ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியாதது ஒன்றே தடையாக உள்ளது. ஒருவேளை அதை மட்டும் சாத்தியமாக்கினால், டை ட்ராவலும் சாத்தியமே.

இப்படியான நிலையில்தான் இன்னும் 4 வருடங்களில் முழுமையாக டைம் ட்ராவல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியது போல தகவல் பரவி வருகிறது. இப்போது நீங்கள் கூறுங்கள்… Time Travel நான்கு வருடங்களில் சாத்தியமா? இல்லையா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com