வயர்லெஸ் சார்ஜிங் சாலை! ரோடு மேல போனாலே சார்ஜ் ஏறிடும்!

Wireless charging road
Wireless charging road
Published on

மின்சார வாகனங்களுக்கென்று பிரத்தியேகமாக அமெரிக்காவில் முதல் முறையாக வயர்லெஸ் சார்ஜிங் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை மீது வாகனங்கள் சென்றாலே சார்ஜ் ஆகிவிடும். 

சோதனை முயற்சியாக சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ள இந்த சாலை, பார்ப்பதற்கு சாதாரண சாலை போலவே தோன்றினாலும் அதன் மேற்பரப்புக்கு அடியில் சார்ஜிங் சுருள்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மின்சார வாகனங்கள் இந்த சாலையின் மீது செல்லும்போதும் அல்லது நிறுத்தப்பட்டிருக்கும்போதும் சார்ஜ் ஏறிவிடும். இந்த புதுமையான தொழில்நுட்பத்தை இஸ்ரேலிய நிறுவனமான எலக்ட்ரான் அமைத்துள்ளது. 

இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தப்பட்டு, எலக்ட்ரானிக் வாகனங்களை எளிதாக சார்ஜ் செய்யும் உட்கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும். இது ஒரு நிலையான போக்குவரத்திற்கு சிறப்பான தீர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்த சாலை எப்படி செயல்படுகிறது?

சில வாகனங்களில் வயர்லெஸ் ரிசீவர் பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய வாகனங்களை இந்த வயர்லெஸ் சார்ஜிங் சாலையின் மீது ஓட்டிச் செல்லும்போது அல்லது நிறுத்தும்போது வாகனம் தானாகவே சார்ஜ் ஏறிவிடும். இந்த சார்ஜிங் செயல்முறை சாலையில் பதிக்கப்பட்டுள்ள சுருளில் இருந்து ரிசீவர் வழியாக சார்ஜ் எடுத்துக் கொள்வதை உள்ளடக்கியது.

இதையும் படியுங்கள்:
பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம் பற்றி தெரியுமா? 
Wireless charging road

இத்தகைய வயர்லெஸ் சார்ஜிங் சாலைகள், பாதசாரிகள், விலங்குகள், வாகனங்கள் போன்ற அனைத்துக்குமே பாதுகாப்பானது. மேலும் இது குறிப்பிட்ட சிறப்பு வகை ரிசீவர் கொண்ட வாகனங்களில் மட்டுமே செயல்படும் என்பதால், எல்லாவிதமான வாகனங்களுக்கும் இது பொருந்தும்படி எதிர்காலத்தில் மேம்படுத்தல்கள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா மட்டுமின்றி ஸ்வீடன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளிலும் எலக்ட்ரான் நிறுவனம் அமைத்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com