டெக் தயாரிப்பு உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள லெனோவோ நிறுவனம்!

lenovo transparent laptop
lenovo transparent laptop

உலக மொபைல் காங்கிரஸ் (WMC) 2024 சந்திப்புக் கூட்டத்தில் லெனோவோ நிறுவனம் டிரான்ஸ்பரன்ட் வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதுவிதமான தொழிற்நுட்பத்தோடு  நம்முடைய வழக்கமான கணினி அனுபவத்தின் ஒரு அப்டேட்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WMC 2024:

நாளுக்கு நாள் நம்முடைய தொழிற்நுட்ப வளர்ச்சியானது வெற்றிப் பாதையில் முன்னோக்கி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தொழிநுட்பரீதியிலான புதிய புதிய கண்டுபிடிப்புகளும், ஐடியாக்களும் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில் புதிய ஐடியாக்கள் மற்றும் யோசனைகளை அறிமுகப்படுத்துவதற்காக, ஒட்டுமொத்த  தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒன்று கூடுவது வழக்கம்அதன்படி ‘சர்வதேச மொபைல் காங்கிரஸ் (WMC)’ என்கிற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்று கூடி தங்கள் தயாரிப்புகளை பிற நிறுவனங்கள் முன்பாக காட்சிக்கு வைத்து அதனை அறிமுகப்படுத்துவர். அதே போல இந்த ஆண்டும்  ஸ்பெயினில் இந்த WMC நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

லெனோவோவின் புதிய மாடல்:

ஸ்பெயின் நாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் லெனோவோ நிறுவனம் இந்த ஆண்டு காட்சிபடுத்திய லேப்டாப் ஒன்று மற்ற டெக் நிறுவனங்களையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. லெனோவோ நிறுவனம் ‘திங்க் புக்’ என்ற வரிசையில் தான் லேப்டாப்களை விற்பனை செய்து வருகிறது. அதே வரிசையில் உலக டெக் தயாரிப்புகளில் முதன்முதலாக ‘டிரான்ஸ்ப்ரன்ஸி லேப்டாப்’ என்ற கான்சப்டை  இந்நிகழ்ச்சியில் அனைவரது முன்னிலையிலும் காட்சிபடுத்தியுள்ளது. அதாவது, டிரான்ஸ்ப்ரன்ஸி லேப்டாப் என்பது ஒரு சாதாரண கண்ணாடியை பார்த்தால் எப்படி அந்த பக்கம் இருப்பது இந்த பக்கம் நமக்கு தெரியுமோ, அதேபோல தான் இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளேயும்  கண்ணாடியைப் போலவே டிரான்ஸ்பரன்ட்டான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

lenovo transparent laptop
lenovo transparent laptop

டிரான்ஸ்பரன்ஸி லேப்டாப்:

லெனோவோ நிறுவனத்தின் இந்த டிரான்ஸ்பரன்ஸி லேப்டாப் மாடல் பல சிறப்பம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • டிரான்ஸ்பரன்ஸி லேப்டாப்பின் டிஸ்பிளே மட்டுமின்றி கீ போர்ட் பகுதியும் டிரான்ஸ்பரன்டான முறையில் அமைந்துள்ளது.

  • டிரான்ஸ்பரன்ஸி லேப்டாப்பின் டிஸ்பிளேயின் மொத்த அளவு 17.3 Inchs.

  • இந்த லேப்டாப்பின் டிஸ்பிளேயானது 1000 நிட்ஸ் பிரைட்னஸ் அளவைக் கொண்டிருக்கிறது.

  • டிரான்ஸ்பரன்ஸி லேப்டாப்பின் டிஸ்பிளே  720 பிக்சல். மேலும் அதோடு இந்த லேப்டாப்பிற்கு எல்இடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
Blockchain தொழில்நுட்பம் என்றால் என்ன?.. உலகமே மாறப்போகுது!
lenovo transparent laptop

பயன்பாட்டிற்கு ஐந்து ஆண்டு தேவை:

இந்த லேப்டாப் சாதரணமான மற்ற வகை லேப்டாப்களைப் போலவே மடித்துகொண்டு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில்தான் உருவாக்கப்படிருக்கிறது. அதோடு இதன் வடிவமும் சிறப்பம்சங்களும் காண்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் லெனோவோ நிறுவனம் இந்த டிரான்ஸ்பரன்ஸி லேப்டாப்பின் வெறும் மாடலை மட்டும்தான் காட்சிக்காக தற்போதைய தேவைக்கு பயன்படுத்தி இருக்கிறது. இதை முழுமையாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரக்  கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகும் என லெனோவோ நிறுவனத்தின் சார்பாக கூறப்பட்டிருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த புதுவிதமான டிரான்ஸ்பரன்ஸி லேப்டாப்பிற்கான வரவேற்பு மக்களிடையே அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com