உலகையே மாற்றிய World Wide Web (WWW). 34 ஆண்டுகால வெற்றிப் பயணம். 

உலகையே மாற்றிய World Wide Web (WWW). 34 ஆண்டுகால வெற்றிப் பயணம். 

ணையதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு World Wide Web என்ற வார்த்தை நிச்சயம் தெரிந்திருக்கும். அல்லது எல்லா இணையதளங்களுக்கும் முன்னால் வரும் WWW பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். இதுதான் ஒரு இணையதளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் விசையாக செயல்படுகிறது. 

முதன்முதலாக ஆகஸ்ட் 1, 1989 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த கணினி விஞ்ஞானியான 'டிம் பெர்னஸ் லீ' என்பவரால் World Wide Web உருவாக்கப்பட்டது. இது எதிர்காலத்தில் மனித வாழ்வில் முக்கிய அங்கமாக மாறும் என அப்போது அவர் நினைக்கவில்லை. தொடக்கத்தில் இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி ஐரோப்பிய அமைப்பில் பணிபுரிந்து வந்தார். அங்கிருந்தபோதுதான், சர்வர் HTML, HTTP, World Wide Web மற்றும் முதல் வலைதளத்தை உருவாக்கினார். இதுதான் பின்னாளில் இணையத்தின் அடித்தளமாக மாறியது. 

இவற்றைப் பயன்படுத்தி அங்கிருந்த விஞ்ஞானிகள் தங்கள் சோதனைகளின் தரவுகளை எளிதாகப் பிறருக்கு பகிர்வதற்கு ஒரு வழியை உருவாக்க வேண்டும் என இவருக்குத் தோன்றியது. 1991-ல் இவற்றின் வளர்ச்சிக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து பல நிறுவனங்களுக்கு இதைப் பகிர்ந்தார். பின்னர் 1993-ல் இவை அனைத்தும் ராயல்டி இல்லாமல் பொதுவில் ஆனது. இதனால் நூற்றுக்கணக்கான வலைதளங்கள் உருவாக்கப்பட்டது. ஒரு வருடத்திற்குள்ளாகவே இதைப் பயன்படுத்தி WWW ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக மாறியது. 

இதன் வருகையால், ஒரு நபர் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும், தகவலைச் சேகரித்து பிறருடன் அதை எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த அமைப்பு மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் உலகளாவிய தொடர்புக்கான நெட்வொர்க்குடன் இணைக்கிறது. இவை அனைத்துக்கும் பிள்ளையார் சுழியாய் அமைந்தது World Wide Web தான். 

இப்போது நாம் பயன்படுத்தி வரும் இணையதளங்கள், சமூக ஊடகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தில் தகவல்களை பகிர்வதற்கான பல வழிமுறைகள் என WWW-னாலேயே ஏற்பட்டுள்ளது. இது தற்போது தன்னுடைய 34-வது ஆண்டில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com