ஒலியை விட வேகமாக செல்லும் X-59 விமானம்.. இதன் பயன்பாடு என்ன தெரியுமா?

NASA X-59.
NASA X-59.

நாசா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் ஒன்றாக இணைந்து ஆறு வருட காலம் கடுமையாக உழைத்து ஒலியை விட வேகமாக செல்லும் X-59 என்ற சூப்பர்சோனிக் விமானத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். 

இந்த சூப்பர்சோனிக் ஜெட் விமானம் ஒலித்தடையை உடைத்து, ஒலியை விட வேகமாக சீறிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான விமானமாகும். இது மிகவும் அமைதியான சூப்பர்சோனிக் விமானம். கடந்த கால சூப்பர் சோனிக் விமானங்களில் இருந்து மிகவும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது இந்த விமானம் ஒலியை விட 1.4 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியது. 

இந்த சூப்பர் சோனிக் விமானம் வேகம் பிடிக்கும்போது ஒரு இடி சத்தத்தைக் கொடுத்து அதன் அதிவேகத்தை ஏற்றுகிறது. இதுகுறித்து பேசிய நாசாவின் துணை நிர்வாகி பாம் மெல்ராய், “இந்த விமானத்தின் சத்தம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். பொதுவாகவே சூப்பர்சோனிக் விமானங்கள் மக்கள் நிறைந்த பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் X-59 இந்தத் தடையை உடைக்கப் போகிறது. மிகவும் பாதுகாப்பான முறையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும்” என அவருக்கு கூறினார். 

X-59 விமானம், 30 மீட்டர் நீளமும் 9 மீட்டர் அகலமும் கொண்ட மெல்லிய குறுகலான முன் பகுதியைக் கொண்டுள்ளது. இதன் ஒட்டு மொத்த நீளத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை அதன் முன்பக்கம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு ஒலி ஏற்றத்தின்போது ஏற்படும் அதிர்வலைகளை விமானம் உடைக்க அதன் மூக்குப்பகுதி உதவும் என விண்வெளி நிறுவனம் கூறுகிறது. 

இதையும் படியுங்கள்:
'கழுதை விமானம்' மூலமாக அமெரிக்காவினுள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள்!
NASA X-59.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் முதன்முறையாக இந்த விமானம் அமெரிக்காவில் உள்ள பல நகரங்களின் மேல் பறக்க விட்டு, 2027க்குள் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் எவ்வாறு சத்தத்தை உணர்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடவும் நாசா தயார் நிலையில் உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com