ஜியோமி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்... விலை என்ன தெரியுமா? 

Xiaomi SU7 Electric Car Launched
Xiaomi SU7 Electric Car Launched

உலகில் எலக்ட்ரிக் வாகன சந்தை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வரும் நிலையில், உலகின் பிரபலமான ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. 

ஜியோமி நிறுவனத்தின் இந்த மின்சார வாகனத்திற்கு SU7 என பெயர் வைத்துள்ளனர். அதாவது SU என்றால் Speed Ultra என அர்த்தம். மற்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களில் உள்ள மோட்டார்களை காட்டிலும், இது வேகமாக இருக்கும் என்பதால் இந்த பெயர் வைத்துள்ளதாக ஜியோமி நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார். 

இந்த எலக்ட்ரிகாரின் சிறப்பம்சமே அதன் மைலேஜ் தான். மொத்தம் இரண்டு வெர்ஷன்களில் வெளிவந்துள்ள SU7, முதல் வெர்ஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 668 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இரண்டாவது மாடல் 900 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடியது. டெஸ்லா நிறுவன கார்களின் அதிகபட்ச மைலேஜே 650 km தான். எனவே ஜியோமி நிறுவன காரின் விலை டெஸ்ட்லா கார்களை விட கூடுதலாகவே உள்ளது. இருப்பினும் இதன் திறனுடன் ஒப்பிடுகையில் கொடுக்கும் விலை சரியானது என சொல்கின்றனர். 

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தை மொத்தமாக காலி செய்யும் முனைப்புடன், பல சீன நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. பல துறைகளில் சீன நிறுவனங்கள் முன்னோடியாக இருந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையில் அவர்களால் சொல்லும் அளவிற்கு பிரபலமடைய முடியவில்லை. அப்போதுதான் Volvo, MG Motors போன்ற நிறுவனங்கள் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளே நுழைந்து, தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் கால் தடம் பதித்து, டெஸ்லாவை வீழ்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

SU7 காரின் விலை என்ன? 

மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் விதமாக SU7 காரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதன் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 24 லட்சமாகவும், ப்ரோ மற்றும் மேக்ஸ் மாடல் காரின் விலை 28 மற்றும் 35 லட்சங்கள் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டின் அடிப்படையில் வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
Elon Musk: AI தொழில்நுட்பத்தால் மனித குலம் முடிவுக்கு வரும்... உண்மை வெளியானது!
Xiaomi SU7 Electric Car Launched

இந்த கார்கள் எலக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக டெஸ்ட்ல நிறுவன கார்கள் இந்த மாடலால் வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com