வேலை தேடும் இளைஞர்கள் உஷார்!

Job scam
Job scam

இன்றைய காலத்தில் தொழில்நுட்பமும் வளர்கிறது அதற்கு ஏற்றவாறு பலவிதமான மோசடிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி சமீப காலமாக இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு வழங்குவதாகக்கூறி பல மோசடிகள் நடந்து வருகிறது. 

இந்த மோசடியில் அதிகம் சிக்கிக் கொள்பவர்கள் வேலையில்லாத இளைஞர்கள் தான். இவர்களை குறிவைத்து சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு ஏமாற்றுகின்றனர். ஏற்கனவே வேலை இல்லாமல் கஷ்டத்தில் இருக்கும் இளைஞர்கள் இத்தகைய கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இதுவரை 30 மோசடி வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ள நிலையில், இத்தகைய மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இணையதளங்கள் வழியாக வேலை தேடுவோரும், தொழில் முதலீடு செய்ய விரும்புவரும் நம்பத் தகுந்த நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஒரு நிறுவனம் முறையாக வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்றால் அந்நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்ய முன்கூட்டிய கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு பயிற்சி தருகிறோம் அல்லது முன்கூட்டியே பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று காரணத்தைக் கூறி பணம் செலுத்த எந்த நிறுவனமாவது வற்புறுத்தினால், அது நிச்சயம் மோசடியாகதான் இருக்கும். 

எனவே இத்தகைய மோசடியில் இளைஞர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை ஏதேனும் மோசடிகளில் சிக்கினால் 1930 என்ற இலவச என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com