உங்களுக்கே தெரியாமல் உங்கள் போன் கால் ரெக்கார்ட் செய்யப்படலாம்!

Your phone call may be recorded without your knowledge.
Your phone call may be recorded without your knowledge.

தற்போது வெளிவரும் எல்லா ஸ்மார்ட் போனில் ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டிங் அம்சம் கொடுக்கப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த அம்சம் தற்போது தேவையானதாகவும், பொதுவானதாகவும் மாறிவிட்டது. 

இந்த அம்சம் இல்லாத ஸ்மார்ட் போன்களிலும் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று கால் ரெக்கார்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம். அதைப் பயன்படுத்தி உங்களின் வாய்ஸ் கால்களை ரெக்கார்ட் செய்ய முடியும். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் நமக்கே தெரியாமல் நம்முடைய அழைப்புகள் பதிவு செய்யப்படுகிறது. இவற்றை நாம் அடையாளம் கண்டு உடனடியாக தடுப்பது நல்லது. 

முதலில் யாருடைய அனுமதியும் இல்லாமல் அவர்களின் அழைப்பை பதிவு செய்வது ஒரு விதமான குற்றம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு தனி நபரின் உரையாடலையும் அவரது ஒப்புதல் இல்லாமல் பதிவு செய்வது அரசியலமைப்பு குற்றப்பிரிவு 21க்கு எதிரானது. அதாவது ஒரு தனிப்பட்ட நபரின் தனியுரிமை முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். எனவே ஒரு நபரின் அழைப்பை பதிவு செய்வது அவரின் தனியுரிமையை மீரும் செயலாகும்.

உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய கால் ரெக்கார்ட் செய்யப்படுகிறது என்றால், அதை சில சிக்னல்களை வைத்து தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஒருவருடன் வாய்ஸ் காலில் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் சில வினாடிகளுக்கு பீப் சவுண்ட் கேட்பதுபோல் உணர்ந்தால், உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படுவதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் உங்கள் வாய்ஸ் கால் ரெக்கார்ட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதற்கான முதல் அறிகுறி. 

ஒருவேளை நீங்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் எதிரே பேசிக் கொண்டிருக்கும் நபர் அவரது காலை ஸ்பீக்கரில் வைத்தால், ஒருவேளை உங்கள் கால் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது என அர்த்தம். அவர்களது போனை ஸ்பீக்கரில் போட்டு மற்றொரு சாதனத்தைப் பயன்படுத்தி உங்களுடைய அழைப்பை அவர்கள் பதிவு செய்யலாம். இத்தகைய சூழலில் உங்களுக்கு பீப் சவுண்ட் எதுவும் வராது. ஆனால் எதிரே உள்ள நபர் ஸ்பீக்கரில் போட்டால், உங்களுக்கு சில இரைச்சல்களும், சில சத்தங்களும் கேட்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் சற்று கவனமாக இருங்கள். 

அடுத்ததாக நீங்கள் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் வேறு ஏதாவது சத்தம் கேட்டால் உங்கள் கால் ஒருவேளை பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கலாம். இத்தகைய சூழலில் பலமுறை இடையிடையே குறுக்கிட்டு பேசுவது போன்ற சத்தம் கேட்கும். இது உங்கள் கால் பதிவு செய்யப்படுவதைக் காட்டுகிறது. 

எனவே யாருடனாவது பேசும்போது இத்தகைய சமிங்கைகள் உங்களுக்குத் தெரிந்தால், உங்களது அழைப்பு பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். சில சமயங்களில் எவ்வித இடையூறும் இல்லாமல் அழைப்புகள் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. இதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எனவே நீங்கள் நம்பத் தகுந்த நபர்களிடம் தான் முக்கியமான விஷயங்களை பகிர்கிறீர்களா என்பதை கவனத்தில் கொண்டு பேசுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com