Aloud என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டப்பிங் கருவி தற்போது ஆங்கிலம், போர்த்து கீசியம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை ஆதரித்து இயங்கி வருகிறது. மேலும் இதில் இந்தி போன்ற மற்ற மொழிகளையும் சேர்க்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
யூடியூபில் புதியதாக வரவிருக்கும் அம்சமானது, பிற மொழிகளில் வீடியோக்களை டப் செய்பவர்களுக்கு உதவும் எனச் சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுதான் google செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் டப்பிங் தயாரிப்பான 'Aloud' என்ற கருவியை அறிமுகப்படுத்தியது. இந்த கருவியால் ஒரு வீடியோவை தானாக ட்ரான்ஸ்கிரிட் செய்து, அதன் டப்பிங் பதிப்பை உருவாக்க முடியும். ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுவதற்கு முன் ட்ரான்ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வார்த்தைகளை திருத்துவதற்கான விருப்பத்தையும் இது வழங்குகிறது.
ஒரு கண்டன்ட் கிரியேட்டர் வெவ்வேறு மொழிகளில் வீடியோக்களை உருவாக்க விரும்பினால் இனி கஷ்டப்பட்டு அதற்கென்று நேரத்தை செலவிட வேண்டாம். அல்லது மூன்றாம் தரப்பு வலைதளங் களையோ கருவிகளையோ நம்பியிருக்க வேண்டாம். நேரடியாக யூடியூபில் வரவிருக்கும் இந்த புதிய கருவியைப் பயன்படுத்தி, ஒரு காணொளியை எந்த மொழியில் வேண்டுமானாலும் நாம் பார்த்துக் கொள்ளலாம். Aloud தற்போது ஆங்கிலம் போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது. இதில் எதிர்காலத்தில் இந்தி மற்றும் இந்தோனேசியன் உட்பட உலகெங்கிலும் உள்ள பல முக்கிய மொழிகளைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
யூடியூப் கிரியேட்டர் தயாரிப்புகளின் துணைத் தலைவரான அம்ஜத் ஹனீப் இதுபற்றி கூறுகையில், "நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் இந்த கருவியை ஏற்கனவே சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர். விரைவில் இந்த அம்சம் எல்லா பயனர்களுக்கும் கிடைக்கும். எதிர்காலத்தில் குரல் பாதுகாப்பு, உணர்ச்சி பரிமாற்றம், மற்றும் ரீ அனிமேஷன் போன்ற செயல்பாடுகளையும் சேர்க்க யூடியூபில் ஜெனரேட்டிவ் AI அனுமதிக்கும்" என அவர் கூறினார்.
கடந்த வாரம் தான் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் டிவி பயனர்களுக்கு 1080 பிக்சல் பிரீமியம் விருப்பத்தை you tube வெளியிடத் தொடங்கியது. மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கான புதிய கூட்டாளர் திட்ட வழிகாட்டல் களையும் அறிவித்தது. இந்த புதிய அறிவிப்பால் கன்டென்ட் கிரியேட்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இனி தங்களின் காணொளியை மற்ற மொழிகளிலும் இலவசமாக டப் செய்து பதிவேற்றலாம் என்ற விருப்பத்தைப் பயன்படுத்த அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.