
இன்று வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பணவரத்து பலவழிகளிலும் இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனைவியின் உடல்நிலையில் கவனம் தேவை. பல்வேறு வகையிலும் புகழ் உண்டாகும். சொத்துக்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து அதிகப்படும், விருந்து, சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். மன மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்கும். பொன்னும், பொருளும் சேரும்.
விசாகம் 4ம் பாதம்:இன்று மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள்.
அனுஷம்:இன்று உத்தியோகம் சிறக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். செம்பு தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.
கேட்டை:இன்று வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9