0,00 INR

No products in the cart.

செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா!

சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘பெற்றோர் செய்த பாபம் பிள்ளைகளை பாதிக்கும்னு சொல்றது எந்தளவுக்கு உண்மை’ அப்படின்னு, என்னிடம் கேட்டார். சட்டுனு எனக்கு ஞாபகத்துக்கு வந்த காஞ்சி மகாபெரியவரோட ஒரு அருளாடலை அவரிடம் சொன்னேன்.
ஒரு சமயம், மகாபெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது தம்பதி ஒருத்தரு, அழகான ஒரு குழந்தையை கொண்டு வந்து மகாபெரியவரோட காலடில போட்டு, அழ ஆரம்பிச்சிட்டாங்க. அந்தக் குழந்தை உடம்புல எந்த அசைவும் இல்லை. கண்ணை மூடிக் கிடந்தது. இதைப் பார்த்த அங்க இருந்த எல்லோருக்கும் அனுதாபமா போச்சு.
குழந்தையை உற்றுப் பார்த்த மகாபெரியவர், ஒரு மடத்து ஊழியரை கூப்பிட்டு, கொஞ்சம் பாலும் நந்தியாவட்டை பூவும் கொண்டுவரும்படி சொன்னார். உடனே அந்த ஊழியர் கொஞ்ச நேரத்துல அந்த இரண்டையும் கொண்டு வந்து அவர்கிட்ட கொடுத்தார். மகாபெரியவர் அந்த பூவை, பாலில் தோய்த்து குழந்தையோட தலை முதல் பாதம் வரை தடவி, கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.
கண்களைத் திறந்த மகாபெரியவர், “குழந்தையை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்குத் தூக்கிண்டு போய், தட்சிணாமூர்த்தி பாதத்துல போட்டு பிரார்த்தனை பண்ணுங்கோ” என்று சொல்லி, அவர்களைஅனுப்பி வைத்தார். அதை தெய்வத் திருவாக்கா எடுத்துக்கிட்ட அந்தத் தம்பதி, உடனே மாயவரத்துக்குக் கிளம்பினாங்க.
ழுகையும் கண்ணீருமா குழந்தையோடு கோயிலுக்கு வந்த அந்த தம்பதி, தட்சிணாமூர்த்தி சன்னிதி முன்பு குழந்தையைக் கிடத்தி, ‘ஓ’ன்னு கதறி அழுதாங்க. ஒரு மணி நேரம் ஆகியும் குழந்தைகிட்ட எந்தவித அசையும் தெரியலை. ஏன்னாஅவங்க செஞ்ச பாவம் அப்படி. திடீர்னு கொஞ்ச நேரத்துல, ஒரு வெள்ளைப் பூனைக்குட்டி அந்தக் கூட்டத்துக்கு நடுவுல வந்தது. வந்த அந்தப் பூனை நேரா குழந்தைக்கிட்ட போய், குழந்தையோட நெற்றியில நாக்கால நக்கியது. பிறகு, அந்தக் குழந்தையோட தலை முதல் பாதம் வரை முகர்ந்து பார்த்துவிட்டு எங்கோ ஓடி மறைந்தது. அதன் பிறகு குழந்தைக்கிட்ட ஒரு அசைவு தெரிஞ்சது. அடுத்த நொடியே, அந்தக் குழந்தை தட்சிணாமூர்த்தி சன்னிதியை நோக்கித் திரும்பிப் படுத்தது. அதோடு, சின்னதா ஒரு சிரிப்பையும் உதிர்த்தது.
இதைப் பார்த்த அந்தத் தம்பதிக்கு சொல்லமுடியாத சந்தோஷம். அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் வியப்புன்னா அப்படியொரு வியப்பு. இந்த அதிசயத்தை நடத்திக் காண்பிச்சது காஞ்சி மகாபெரியவர்தான் அப்படின்னு அங்க இருந்த எல்லோரும் நம்பினாங்க.
ஆனா, ‘இது போன ஜன்மாவுல அவங்க செஞ்ச பாவம்’ அப்படிங்கறது மகாபெரியவருக்கு மட்டும்தான் தெரியும். அந்தக் குழந்தையோட தந்தை, போன பிறவியில ஒரு பூனையை அடிச்சுக் கொன்னதும், அந்தப் பூனையோட சாபத்தாலதான், இந்தப் பிறவியில அவரோட குழந்தைக்கு இந்த நிலைமை என்றும் தன்னோட ஞானத்தால உணர்ந்திருந்தார் மகாபெரியவர். இதைத்தான், ‘முற்பிறவியில பூனையைக் கொன்றவர்களுக்கு புத்ர பாக்கியம் இல்லாம போவது, ஊனமான குழந்தைகள் பிறப்பது போன்ற தோஷங்கள் உண்டாகும்’ அப்படின்னு சொல்றது சாஸ்திரம்.
பாதிக்கப்பட்ட பூனை இனத்தைக் கொண்டே அந்தக் குழந்தையின் தோஷத்தைப் போக்கி, அதன் விதியை மாற்றி எழுதிய மகாபெரியவரின் மகிமையை என்னவென்று சொல்றது?
இப்ப சொல்லுங்கபெத்தவங்க செஞ்ச பாவம், பிள்ளைகளை பாதிக்குமா? பாதிக்காதா?” அப்படின்னு நண்பர்கிட்ட கேட்டேன். அவர் முகத்துல ஆச்சரியம் மறையாம, ‘ஆமாம்’ என்பது போல தலையை மட்டும் அசைத்துவிட்டுக் கிளம்பினார்.

1 COMMENT

  1. பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகள் தலையில் என்பார்கள். அதனால்தான் நாம் நம் வருங்கால சந்ததிகளுக்காகவாவது தெரிந்து எந்த பாவமும் செய்யாமல் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும் என்று வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள்.
    பெரியவாளின் ஞானதிருஷ்டி அனைவரும் அறிந்ததே.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

2
- எ.எஸ்.கோவிந்தராஜன் இறை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது...

கோமாதா; நம் குலமாதா!

0
- கே.பாலகிருஷ்ணன் பாற்கடலிலிருந்து தோன்றிய, கேட்பதை அளிக்கும் சுரபியாகிய காமதேனுவின் வடிவில் கண்ணன் விளங்குகிறான் என்பதால் ஆநிரையை முறைப்படி வழிபட்டால், ‘ஆநிரை காப்பான்’ நம்மைக் காத்தருள்வான் என்பது நம்பிக்கை. அதனாலேயே கார்த்திகை கிருஷ்ணபட்ச துவாதசி...