சேம்புக்கீரை ரோல்

சேம்புக்கீரை ரோல்

வி. ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.

தேவை:

சேப்பங்கிழங்கு கீரை -4

வெங்காயம்-1/2 கப் ( பொடியாக நறுக்கியது)

இஞ்சி , பச்சை மிளகாய், பூண்டு இடித்தது1 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு1/2 கப்

உப்பு தேவையான அளவு

எண்ணெய்தாளிக்க தேவையான அளவு

கடுகு, உளுந்து தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலைஅலங்கரிக்க.

எலுமிச்சை சாறு 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சேப்பங்கிழங்கு இலையை காம்பு நீக்கி, சுத்தம் செய்து, சமோசா ரோல் அளவு அரிந்து கொள்ள வேண்டும் கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவிட்டு கொரகொரப்பாக அரைத்து அதில்,வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு,பூண்டு சேர்த்து கலக்கவும். இந்த மாவு கலவையை சேப்பங்கிழங்கு இலையில் பரப்பி, இலையை சுருட்டி ஆவியில் வேகவிட்டு எடுத்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து தாளித்து இந்த வெந்த சுருள்களை போட்டு இலேசாக பிரட்டி,கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லி தூவி அலங்கரிக்கவும். இளஞ்சூடாக இருக்கும் நிலையில் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும் மிகவும் ருசியான சிற்றுண்டி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com