சங்கரர் கோவிந்தருடைய ஆசிரமத்தில் இருந்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

சங்கரர் கோவிந்தருடைய ஆசிரமத்தில் இருந்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
Published on

காலடியை விட்டுப் புறப்பட்ட சங்கரர் குருவைத் தேடிக் கொண்டு வடதிசையில் பயணம் செய்தார்.

பிரம்மம் என்றும் ஆத்மா என்றும் கூறப்படும் மெய்ப்பொருள்தான், குரு-சிஷ்யன், தந்தை- மகன் போன்ற பல்வேறு தொடர்புடைய உருவங்களாகத் தோற்றம் கொள்கிறது என்பது அத்வைத வேதாந்தக் கொள்கை. இதை ஞானிகள் உணர்கின்றனர். அஞ்ஞானிகள் உணர்வதில்லை.

அத்வைத கொள்கைகளை விளக்கி நிலைநாட்டவே அவதரித்துள்ள சங்கரர்... “ஞானோபதேசம் செய்யக் கூடிய ஒரு குருவைத் தேடி உபதேசம் கேட்பதே முறை” என்ற உலக நடைமுறைக்கேற்ப நடந்தார்.

காடுகள், மலைகள், கிராமங்கள், நகரங்கள் என்று நீண்ட பயணத்திற்குப்பின் நர்மதை நதிக்கரையை அடைந்தார்.

அங்கே தன் குருநாதரைப் பெற்று மகிழ்ந்தார்."கோவிந்த பகவத் பாதர்" என்பது அவர் பெயர். அவர் "கௌடபாதரின்" சீடர். ஒரு குகையில் வாழ்ந்து வந்தார்.

கோவிந்த பகவத்பாதர் சமாதிகூடி நிஷ்டையில் அமர்ந்து இருந்த குகையின் வாயிலில் நின்று... வணங்கி "தான்" வந்திருப்பதை தெரிவித்தார். தன்னை அவரது சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

நிஷ்டையில் இருந்து எழுந்தவர்...சங்கரரைப் பார்த்து, "நீ யார்?" என்றார்.

அதற்கு சங்கரர்...பத்துச் செய்யுள்களில்... தான் பரப்பிரம்மம் ஆன பிரம்மமே என எடுத்துரைத்தார். அது "தசச்சுலோகி" (பத்து செய்யுள்கள் கொண்ட சிறு நூல்) என்று வழங்கப்படும். இதில் சங்கரர், "பரமாத்மா எனப்படும் பிரம்மமே "நான்" என்பதை, கழிப்பன யாவற்றையும்... அது அன்று... அது இல்லை... என்று அறிந்த பிறகு எஞ்சுவது எதுவோ அதுவே "நான்" என்ற வகையில் அமைத்து விளக்கியிருப்பார்.

உலகமென்ற நிகழ்ச்சிகள் பலவற்றையும் பொய் என்று நிரூபித்துக் கழித்தபின் எஞ்சுவது இரண்டாவது எதுமில்லாத ஆத்மா.

நனவு நிலையில் நம்மால் அனுபவித்து உணரப்படும். புறத்தே உள்ள பொருள்கள் அனைத்தும் கனவு நிலையில் பொய்யாகி விடுகின்றன. கனவு நிலையில் காணும் உலகமான எண்ணங்களும் வடிவங்களுமான உலகம் ஆழ்ந்த உறக்க நிலையில் மறைந்து விடுகின்றன. நனவில் புறத்தே உல்ல உலகமும் கனவில் அகத்தே விரியும் உலகமும் ஆகிய இரண்டுமே உறக்கத்தில் இல்லை.

ஆனால், ஆழ்ந்த உறக்கத்தில் தன்னுணர்வு எனும் பிரக்ஞையாக, ‘நான்’ எனும் ஆத்மாவிலிருந்து உறக்கம் என்பது ஒரு வெறுமையான சூன்ய நிலை அல்ல. ஏனென்றால் ஒன்றையுமே உணராமல் இருப்பது என்பதே வெறுமையாய் இருப்பது என்று ஆகாது. ‘நான்’ என்ற பிரக்ஞை -தன்னுணர்வு...எந்தக் காலத்திலும் எதனாலும் இல்லையென்று மறுக்கப்படுவது இல்லை. மற்ற அனைத்தும் ஒழிந்த பிறகும் அது மீதி இருக்கிறது. இடம் எனும் தேசகம் அழிந்த பிறகும்... காலம் என்பதே ஸ்தம்பித்து நின்று விட்டப் பிறகும்... இந்த தன்னுணர்வு நாசமாவதில்லை. உபநிடதங்களில் ‘ஆத்மா’ என்றும்...‘பிரம்மம்’ என்றும் குறிப்பிடப்படும் இது...எப்போதும் நிலையாய் உள்ளதும்...மாறாததுமான மெய்ம்மை. இது மிகவும் மங்களகரமானது. உயர்ந்த பெருமைக்குரியது.

அது தூய- மனசு, கலவாத- பிரக்ஞை. அது இரண்டாவது எதுவுமே இல்லாத முழுமை.

இதி ஒருவன் உணர நானா? என் உயிரா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட தத்துவ விசாரத்தால்...ஒன்றேயான... முழுமையாக உள்ள பிரம்மமே ஆத்மா... அதாவது "தான்" என்று தெரிதல் வேண்டும்.

இவ்வாறு சங்கரர் தனது,"தசச் சுலோகி" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அத்வைத உண்மையை எடுத்து விளக்கியதும்...கோவிந்தர் மகிழ்ந்து..."வேதாந்த தத்துவத்தை உலகிற்கு நிலைநாட்ட மண்ணுலகில் அவதாரம் செய்துள்ள சிவனே நீ என நான் அறிவேன்"என்றார்.

பின் அவரை சந்நியாசம் என்ற துறவறம் மேற்கொள்ள சொன்னார்.

பரம்பொருள்-பிரம்மம் ஒன்றே... இரண்டாவது ஏதுமில்லை என்ற வாக்கியங்கள் உபதேசித்தார்.

"தத் த்வம் அஸி" (அது நீ)

"ஆஹம் பிரம்ம அஸ்மி" (நான் பிரம்மம்)

"அயம் ஆத்மா பிரம்ம"(தான் எனும் இது பிரம்மம்)

"ஸர்வம் யத் அயம் ஆத்மா" (இது என்றும் அனைத்தும் பிரம்மம்)

என்பது போன்ற அரும் பெரும் சொற்றொடர்களை பிறருக்கு உபதேசித்தார்.

சங்கரர் கோவிந்தருடைய ஆசிரமத்தில் இருந்த போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

நர்மதை ஆற்றில் வெள்ளம் பெருகி..உடைப்பெடுத்து இருகரைகளிலும் இருந்த கிராமங்களை முழுகச் செய்து, மக்களை தாக்கியது. சங்கரர் தன் கையில் இருந்த கமண்டலத்தை பூமியில் வைத்து "ஜலாகாஷணம்" எனும் மந்திரத்தை ஜபித்தார். நதி வெள்ளம் கட்டுப்பட்டு ஊரைக் காப்பாற்றியது.

இதை வியாசர்... முன்னமேயே கணித்திருந்தார். “நர்மதையில் வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவரே, தான் எழுதியுள்ள பிரம்ம சூத்திரத்திற்கு விரிவுரை எழுதும் தகுதியுள்ளவர் ஆவார்” என.

இதை அறிந்திருந்த கோவிந்தரும், சங்கரரிடம் "நீ காசிக்குச் சென்று அங்கு வாசம் செய்து கொண்டு... அத்வைதத்தின் மூன்று அடிப்படைகளான, பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள், பகவத்கீதை ஆகிய மூன்றிற்கும் விரிவுரை செய்க" என்று பணித்தருளினார்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com