அந்த உத்தமத் தாயும் மிகுந்த அமைதியுடனும்,முழு நம்பிக்கையுடனும் தன் முடிவை ஏற்றார்.

அந்த உத்தமத் தாயும் மிகுந்த அமைதியுடனும்,முழு நம்பிக்கையுடனும் தன் முடிவை ஏற்றார்.

ஆதிசங்கரரின் வரலாறு - 9

ங்கரர் தனது தாயார் மரணம் சம்பவிக்கும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தார்.

அத்தகைய நேரத்தில் தான் வந்து சேர்வதாக தாயிடம் உறுதி அளித்ததை நினைத்துக்கொண்டு உடன் காலடி பயணம் மேற்கொண்டார்.

(சங்கரர் சிருங்கேரியில் இருந்தபோது தன் தாயாரின் இறுதி நேரத்தை அறிந்து காலடிக்கு சென்றதாகக் கூறும் மாதவீயம், வியாசாசலீயம், காசியில் சங்கரருக்கும், வியாசருக்கும் விவாதம் நடந்தபோது இது நேர்ந்ததாகக் கூறுகிறது. காசியை விட்டு சங்கரர் புறப்பட்டபின் இது நிகழ்ந்ததாக சித்விவாசர் கருத்து)

தன் மகனை மீண்டும் கண்ட ஆர்யாம்பாள் பெரிதும் மகிழ்ந்தார். சங்கரர் தன் தாய்க்கும் குருவானார். அவருக்கு தத்துவங்களை எடுத்துரைத்து ஆத்மஞானம் அருளினார். உயர்ந்த கதி அடையும் வண்ணம் தன் தாயாரை பக்குவம் பெறச் செய்தார். மரண பயமும், கவலையும் இல்லாமல் இருக்கச் செய்தார். அந்த உத்தமத் தாயும் மிகுந்த அமைதியுடனும், முழு நம்பிக்கையுடனும் தன் முடிவை ஏற்றார்.

சங்கரரின் உற்றார், உறவினர்கள் அவர் தன் தாய்க்கு தானே இறுதிச் சடங்குகள் செய்வதை ஒப்புக்கொள்ள மறுத்தனர். ஒரு சந்நியாசி ஈம கடன்களைச் செய்வதை ஒப்புக்கொள்ள மறுத்தனர். ஆகவே, அவர்கள் அனைவரும் அவருடன் ஒத்துழைக்காமல் சென்று விட்டனர்.

சங்கரர்... தன் தாயார் வசித்து வந்த வீட்டின் தோட்டத்தில் ஒரு மூலையில் வாழைமட்டைகளாலேயே ஒரு சிதை அடுக்கித் தன் தாயின் உடலை அச்சிதையில் வைத்து வாழை மட்டைகளையும் தண்டுகளையும் கொண்டு மூடி தனது யோக சக்தியால் அந்தச் சிதைக்கு தீ மூட்டி வைத்தார்.

இதனால் சங்கரரின் உறவினர்களுக்கு ஒரு சாபம் நேர்ந்ததாகவும், சமீப காலம் வரை அந்த உறவுகளைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பங்களில் இறந்தவர்களின் உடல்களை தன் வீட்டுத் தோட்டத்திலேயே எரிப்பது வழக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

(தொடரும்)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com