0,00 INR

No products in the cart.

உச்சநீதிமன்றம்  வெடித்த பட்டாசு

– ஆதித்யா

 

பசுமைப் பட்டாசு

ண்மையில் தில்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய நான்கு மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். குறிப்பாகத் தமிழகத்தின் பொருளாதாரமானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. இதில் ஏற்பட்ட பாதிப்புகள் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. எனவே இந்தத் துறைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் சிவகாசியை மையமாக வைத்து பட்டாசு உற்பத்தி தொழில் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் 8 லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் இந்தப் பட்டாசு தொழிலை நம்பியிருக்கிறது. இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பட்டாசு வர்த்தகம் தமிழகத்தில் தான் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு விற்பனைக்கு உங்கள் மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டிருப்பதாக எனக்குத் தெரியவந்தது.

’காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம்’ என்று நம்புகிறேன். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதாவது, ஏற்கனவே சில பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேசமயம் பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் குறைந்த அளவிலான மாசையே வெளிப்படுத்துகிறது. எனவே ஒட்டுமொத்தமாகப் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்திருப்பது சரியானதாக இருக்காது.

இதுபோன்ற தடைகள் வேறெந்த நாடுகளிலும் இல்லை. உங்கள் மாநிலங்களைப் போல மற்ற மாநிலங்களும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்தால், இந்தத் தொழிலே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை உண்டாகும். இந்தியப் பண்டிகைகளின் ஓர் அங்கமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். அதிலும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது.

எனவே, சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், பொதுச் சுகாதாரம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் வகையில் நாம் முடிவுகளை எடுக்கலாம். அந்த வகையில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தக் கடிதத்துக்கு முக்கியக் காரணம் ஆண்டுதோறும் உச்ச நீதிமன்றம் வெடித்து வரும் பட்டாசுகள்தான்.

2018ஆம் ஆண்டு “2 மணி நேரம் மட்டுமே தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வேண்டும்” எனும் ஓர் அதிரடித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளில் தலைநகர் புது தில்லியில் ஏற்பட்ட கடுமையான காற்று மாசுபாட்டைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் வெடிகள் வெடிப்பதில் நாடு முழுக்கப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பட்டாசுத் தொழிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என மத்திய அரசு வலியுறுத்தியதன் பேரில் பட்டாசுத் தடையை நீக்கியதோடு, இனி ‘பசுமைப் பட்டாசுகளை’ மட்டுமே நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்

அது என்ன பசுமைப் பட்டாசு?

உலகத்திலேயே ’பசுமைப்பட்டாசு’ என்ற கான்செப்ட்டை முதன்முதலில் சிந்தித்த, செயல்படுத்திய, பயன்படுத்திய, உற்பத்தி செய்த ஒரே நாடு இந்தியாதான்.

”அப்படி ஒரு அவசரத்தேவை என்ன வந்தது?” என்று கேட்டால், கடந்த ஆண்டு நிகழ்ந்த மரணங்களில் ஒரு லட்சம் குழந்தைகள் காற்று மாசுபாட்டால் மட்டுமே இறந்து போயிருக்கிறார்கள்…

இந்தியா போன்ற நாடுகளில் 98 சதவிகிதம் குழந்தைகள் நச்சுக்காற்றைச் சுவாசிக்கிறார்கள். ”5 வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்களில் 10ல் ஒன்று காற்று மாசுதான் காரணமாக இருக்கிறது” என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின்
2018ஆம் ஆண்டுக்கான அறிக்கை.

அதனால், பட்டாசைத் தடை செய்ய வேண்டும். ஆனால், அதை நம்பி இருக்கிற எளிய மக்களின் வாழ்க்கை (இந்தியாவில் ஏறக்குறைய 60 லட்சம் பேர்) ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்கிறது. அவர்களுக்கும் வாழ்வாதாரப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்தப் பசுமைப் பட்டாசு.

இதுவரை தயாரிக்கப்பட்டு வந்த பட்டாசுகளைவிட 25 – 35% அளவுக்கு
மூல நுண்துகள்கள் (Particulate Matter) குறைவாக இருக்க வேண்டும்,
நச்சு மூலங்கள் இருக்கக்கூடாது, புதிதாகத் தயாரிக்கப்படும் பட்டாசுகள், பழைய பட்டாசுகளைவிட 35% குறைவான புகை மற்றும் சத்தம் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும், என்பன போன்ற விதிகளுடன் பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) அங்கமான தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI – நீரி) இதற்கான ஆராய்ச்சியில் இறங்கி இப்போது வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

ஆனால், கடந்த பிப்ரவரி வரைக்கும் பெரும்பாலான பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கவும் இல்லை. இதற்கான பயிற்சி எடுத்துக்கொள்ளவும் இல்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஹர்ஷவர்தன் பசுமை பட்டாசுகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

சுமார் 230 பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. (சிவகாசியில் மட்டுமே சுமார் 1076 பட்டாசு ஆலைகள் உள்ளன என்பது தனிக்கதை)

இதனால், பட்டாசு நிறுவனங்கள் பசுமை பட்டாசுகளை ஓரளவுக்குத் தயாரித்து வழக்கம்போலப் பட்டாசுகளையும் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தன. இதைத்தடுக்கச் சில மாநிலங்கள் பட்டாசு விற்பனை முழுவதுமே தடை செய்து விட்டன, அந்த மாநில முதல்வர்களுக்குத்தான் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்,

இந்தத் தீபாவளிக்கு உங்கள் குடும்பத்தில் பசுமை பட்டாசு மட்டுமே வெடியுங்கள். இதனால். மாசு முழுவதுமாகக் குறைந்துவிடப்போவதில்லை என்றாலும் கணிசமாக் குறையும் வாய்ப்பு அதிகம். வரும் தலைமுறைக்காகச் சூழலைக் காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமில்லை நமக்கும் இருக்கிறது.

1 COMMENT

  1. உச்சநீதிமன்றம் சில தளர்வு கள அறிவித்து உள்ளதை வரவேற்போம்.மேலும் சில
    நல்ல தகவல்களை எதிர் பார்க்கிறேன்
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...