சொல்ல விரும்புகிறோம்

சொல்ல விரும்புகிறோம்
Published on

ங்கிதமின்றி கணவருக்கு எரிச்சல் மூட்டினாலும், லதாவின் பொறுப்பும், அக்கறையும் கிரேட்டுங்க.

– என்.கோமதி, நெல்லை

டுத்து உறங்கும் பாயில் இவ்வளவு விஷயங்களா? இத்தனை பயன்களா?' என்று ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொள்ள வாய்ப்பு தந்த சகோதரிக்கு நன்றிகள்.

தாய்மொழி வந்த நீதி… அந்த நீதியை வழங்கிய நீதியரசர் வணக்கத்திற்கு உரியவர். நீதிமன்றத்தில் நீதியரசர்கள் இந்த வழியில் சென்றால் வாதி பிரதிநிதிகளின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து, நீதி வழங்க ஏதுவாக இருக்கும்.

– க. மோகனசுந்தரம், திருநெல்வேலி

விருந்துக்கும் விழாக்களுக்கும் மேக்கப்புடன் முகத்தை எப்படி, 'பளிச்'ன்னு ஆக்கிக்கொண்டு செல்கிறோமோ, அந்த அளவுக்கு மேக்கப்பை முறையாகக் கலைத்து, சருமத்தின் இயற்கைத் தன்மையை. 'பளிச்'ன்னு ஆக்குவதும் அவசியம் என்பதை எடுத்துரைத்த விதம் சூப்பர்.

– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

ணக்கம். 'நேசிக்கக் கற்றுக்கொள்' என்ற படக்கதை சிந்தனைக்கு விருந்து. மிக அருமையான படங்களைப் போட்டு, பெரிய கருத்து சொல்லி எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய மங்கையர் மலரை நேசிப்பது போல படம் வரைந்து வாழ்த்த ஆசை. படம் வரையத் தெரியாதலால் மடலாக வரைந்து வாழ்த்துகின்றேன்.

– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

'வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க' பக்கத்தில் வந்த செய்திகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ருசியுடன் இருந்ததால், அறுசுவை உணவு சாப்பிட்டது போல மன மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைத்தது. சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்தது. பிரசுரித்த மங்கையர் மலரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

– நந்தினி கிருஷ்ணன், மதுரை

ப்போதும் எதுவும் தொலைந்து விடவே இல்லை. கனவுகளைத் துரத்த நமக்கு வேண்டியதெல்லாம் போதிய அறிவும், சிறப்புப் பயிற்சியும், விடாமுயற்சியுமே என்று மிகத்தெளிவாகச் சொல்லி ஊக்கப்படுத்தியது, 'ஒரு வார்த்தை.' மிகவும் அருமையான பயனுள்ள தலையங்கம்.

– லக்ஷ்மி ஹேமாமலினி, சென்னை.

க்கால இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு Career choosing எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, `ஒரு வார்த்தை`யில் அனுமேடம் மிக அழகாக, தெளிவாக, புரியும்படியாக எடுத்துரைத்துள்ளார். கனவுகளைத் துரத்த போதிய அறிவும், சிறப்பு பயிற்சியும், விடா முயற்சியும் தேவை என்ற கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும்.

– எஸ்.கெஜலட்சுமி, லால்குடி

'பனை' கட்டுரை படித்தேன். வாழை மரத்தைக் காட்டிலும் பனை மரம் கூடுதலாகப் பயன் அளிக்கக்கூடியது என்ற கருத்து எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று. பனைமரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் இவ்வேளையில் இப்படிப்பட்ட கட்டுரை, மங்கையர் மலரில் வெளியானது, பனையை அழிவில் இருந்து காப்பாற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

– ஆர்.வித்யா, பள்ளிக்கரணை

'இங்கிதம்' என்ற சிறுகதை அருமையாக இருந்தது. ரசிக்கவும் வைத்தது; சிரிக்கவும் வைத்தது. 'தெறூ' என்ற புதுமையான வார்த்தையைத் தெரிந்து கொண்டோம். உண்மைதான்… சாப்பிடும் பொருட்களை வீணாக்கக் கூடாது எனப் புரிந்தது.

– உஷா முத்துராமன், மதுரை.

பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் சக்தி வெளியில் எங்கும் இல்லை. அது நம்மிடமே உள்ளது என்பதை, `ஒரு வார்த்தை` பகுதியில் ஆணித்தரமாக கூறியிருந்தது அருமை.

– வசந்தி மதிவாணன், அரூர்

நூறு வருடகால, 'கணபதி கெளரி' பற்றிய பல அரிய செய்திகள் விநாயகர் மகிமையை உணர்த்தியது. 'பொன்னியின் செல்வன்' பற்றிய ஒரு கேள்விக்கு? இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு அனுஷா வைத்த வேண்டுகோள் நியாயமானது! உண்மையானது.

– சி.கார்த்திகேயன், சாத்தூர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com