0,00 INR

No products in the cart.

சொல்ல விரும்புகிறோம்!

டென்னிஸ் உலகின் புதிய நட்சத்திரமான, `எம்மா ராடுகான்’ பற்றிப் படித்ததும் உற்சாகமாக இருந்தது. அவருடைய விவரங்களையும், அவர் செய்த சாதனைகளையும் படித்ததும், `அவர் சாதிக்கப் பிறந்தவர்’ என்று மனம் வாழ்த்தியது.

– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

மஹாளயம் நாட்களைப் பற்றிப் படித்ததும், `நாமும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. காசியின் மகத்துவம் பற்றியும், காசிக்கு எப்படி இவ்வளவு புனிதத்தன்மை ஏற்பட்டது என்பது பற்றியும் அழகான புராணக் கதை மூலம் சொல்லி எங்களை காசிக்கே அழைத்துச் சென்ற மங்கை மலருக்குப் பாராட்டுக்கள்.

– உஷா முத்துராமன், திருநகர்

ஜெயகாந்தி எழுதிய, `செம்பா’ சிறுகதையைப் படித்ததும் மனநிறைவு ஏற்பட்டது. “காதல், கல்யாணம் எல்லாம் நம் கையில் இல்லை” என்ற செம்பா பாட்டியின் மன வருத்தத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. மிக அருமையான சிறுகதை… பாராட்டுக்கள்.

– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

`நமது எம் எஸ்’ – எம்.எஸ். பற்றிய வாசகங்கள் மிகவும் அருமை. கர்நாடக சங்கீதம் தெரியாதவர்களைக் கூட, தலையசைத்துக் கேட்க வைக்கும் ஒரு அருமையான பாடகி.

– நந்தினி கிருஷ்ணன், மதுரை

`ஒரு வார்த்தை` படித்ததும் மனம் முழுவதும் வேதனை சூழ்ந்து கொண்டது. `நன்கு படித்து, பாரதி கண்ட புதுமைப் பெண்களாக வாழ வேண்டியவர்கள் இப்படி இருக்கிறார்களே’ என்று மனம் வேதனை அடைந்தது. `நூறு வருஷம் கழித்துப் பிறந்து வந்தாலும், நீர் கனவு கண்ட புதுமைப்பெண்களைக் காண முடியுமோ… அதுவும் கானல் நீர்தானோ?’ என்று ஆசிரியர் வருத்தத்துடன் எழுதியதைப் படிக்கும்போது, பாலைவனத்தில் நடப்பது போன்று இருந்தது.

– பிரகதா நவநீதன், மதுரை

பிரிட்டிஷ் கவர்னர் தாமஸ் மன்றோ பற்றிய கட்டுரையை இவ்வார மங்கையர் மலரில் படித்து, அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்டோம். பிரிட்டிஷ் கவர்னராக இருந்துகொண்டு அவர் இந்திய மக்களுக்காகச் செய்த நற்செயல்களும், சீர்திருத்தங்களும் ஆச்சர்யம் அளிக்கும் விதத்தில் உள்ளன.

– ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை

இவ்வார மங்கையர் மலரில், `நீண்ட ஆயுள் வேண்டுமா?` என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை அருமையாகவும் அனைவரும் படித்துப் பயன்பெறும் விதத்திலும் அமைந்திருந்தது. அதில், தேரையர் சித்தர் நீண்ட ஆயுளுடன் வாழ மனிதன் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை பிரித்துக் கூறிய விதம் சிறப்பு!

– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

அனுவின், `ஒரு வார்த்தை’ இந்த வாரம் நெஞ்சில் பாரத்தை சுமத்தியது. அதுவும் முண்டாசுக் கவிஞனின் நூற்றாண்டு பொழுதில், பெண்களின் வாழ்க்கை, `பூவா? தலையா?’ என்று தீர்மானம் செய்யப்பட்டது கொடூரம். பாரதியே, இந்த இளைய சமுதாயத்தை மன்னிப்பாயாக.

க.மோகனசுந்தரம், திருநெல்வேலி

`பெண்ணுக்குப் பெண்ணே எதிாி’ என்ற நிலை அகன்ற பிறகுதான் மகாகவி பாரதியின் கனவுகள் சாத்தியமாகும் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

– நா.புவனா நாகராஜன், செம்பனாா்கோவில்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சுதந்திர இந்திய வளர்ச்சிக்கு விதைகள்! தாமஸ் மன்றோ – 2

0
- அ.பூங்கோதை பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலன்றி, மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தனது குதிரையில் பயணம் செய்து...

அன்புவட்டம்

0
- அனுஷா நடராஜன் குற்றால அருவி, கும்பக்கரை அருவி, திற்பரப்பு அருவி, ஒகேனக்கல் அருவி... இதில் எந்த அருவியில் தங்களுக்குக் குளித்து மகிழ ஆசை? - எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி கு, கும், திற், ஒ... எல்லா...

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

0
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை’ ஜெரி கேர் (Geri...

துர்கா தேவி சரணம்!

0
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி * ’துர்க்கம்’ என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர்....

எடைக் கட்டுப்பாடு!

0
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள்...