தலைமை ஆசிரியை லீமாரோஸ்லிண்ட் அவர்களின் பணியைப் பற்றி படிக்கும்போது இப்படியும் ஒரு ஆசிரியை பணியாற்ற முடியுமா என்று அனைவரையும் வியக்க வைக்கிறது. பாராட்ட வார்த்தையில்லை.
– எஸ்.கெஜலட்சுமி, லால்குடி
‘எந்தையும் தாயும்‘ சிறுகதை படித்தேன். யதார்த்தமான நிகழ்வுகளை மனதில் பதியும் வகையில் கதையில் பதித்துள்ளார் கதாசிரியர் ரேவதி பாலு. சீனுவின் உள்ளம் அவனது பெயருக்கு ஏற்றவாறு இனிமையாக உள்ளது. சராசரி குடும்பப் பெண் போல் சுந்தரியின் பாத்திரம் அமைந்துள்ளது, அருமை. நம் கண் முன்னே காட்சிகளை காண்பதுபோல் கதையை கொண்டு சென்ற ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டு.
– ஆர்.வித்யாசதீஷ்குமார், பள்ளிக்கரணை
“நவராத்திரி தாத்பரியம்” மன நிறைவாக இருந்தது. எங்கள் வீட்டிற்கு நவராத்திரி கொலு வந்துவிட்டது என்ற ஒரு ஊக்கத்தை கொடுத்தது.
– பிரகதா நவநீதன். மதுரை
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை வந்துகொண்டிருந்த “மங்கையர்மலர்” இப்போது சனிக்கிழமை எங்கள் கைகளில் தவழ்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நன்றாக அமர்ந்து ஆசையுடன் படிக்கலாம் என்று எண்ண வைத்த அருமையான செய்தி இது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
– வெ.முத்துராமகிருஷ்ணன். மதுரை
எதிலுமே எப்போதும் பொறுமை காத்து, நுணக்கம்,நுட்பம் தேர்ந்து “டைம்” பார்த்து அடித்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று ‘ஒரு வார்த்தை’யில் எங்களை வாழ்த்தி எங்களுக்கு உற்சாகம் கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை
மங்கையர்மலர் புதிய வடிவில் உருவாகியுள்ளதால் வாசகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அனுஷாவின் பதில் நூற்றுக்கு நூறு உண்மை. “மூவ் வித் தி வேவ்” என்பது போல நாமெல்லாம் புதிய மின் அலை மேலே மங்கையர் மலரை படித்துவிட்டு சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறோம் என்பதை மிக அழகாக சொன்ன அனுஷாவிற்கு பாராட்டுக்கள்.
– உஷாமுத்துராமன், திருநகர்
–லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை
கண்ணை கவரும் அட்டைபடம்,சீருடைய பொம்மைகள், நவராத்திரி கொலு டிப்ஸ்கள், நவராத்திரியில் அம்பிகை அலங்காரம் அனைத்தையுமே எப்போதும் நினைவில் வைத்து கொள்ள வைக்கிறது மங்கையர் மலர்.
– வி.கலைமதி சிவகுரு, புன்னைநகர்,
இந்த காலத்துக் குழந்தைகளின் மனதை புடம்போட்டு காட்டிய(ஒருவார்த்தை) அனுஷா மேடம் அவர்களுக்கு ஒரு பெரிய சபாஷ்.
– கிரிஜா ராகவன்
www.kalkionline.com இணையதள பதிவுகள்
இது சாப்பாட்டு தத்துவம்
கே. எஸ். கிருஷ்ணவேணி says :
பிரஷர் அதிகமாகும்போது விசிலடித்து கொண்டாடுங்கள். அருமை .அனைத்து தத்துவங்களும் சூப்பர். பாராட்டுக்கள். பித்தம் போக்கும் உணவுகள் சுவையான பதிவு.
ஆசிரியப் பணி..
Vaniganapathy says :
ஆசிரியர் பணியைத் தன் அருஞ் செயல்களால் அற்புத பணியாக புது வடிவம் கொடுத்து உள்ளார் லீமா .. சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் களங்கப்பட்ட ஆசிரியர் பணி இவரைப் போன்ற வர்களால் தலை நிமிர்ந்து நிற்கிறது.
எந்தையும் தாயும்
என்.கோமதி says :
எந்தையும், தாயும் கொடுத்து வாழ்ந்தது இந்நாடு என பாடவைத்து விட்டது ரேவதியின் கதை.
வசந்தா மாரிமுத்து says :
கதை நெகிழ வைத்தது.அருமை. பெற்றோர் பெருமை உணர வைத்தது.
வி.கே.லக்ஷ்மிநாராயணன் says :
நெஞ்சை நெகிழ வைத்த நல்ல கதை.
F.B. பதிவுகள் – சிவாஜிகணேசன் நடிப்பில்…..
வி.கே.லக்ஷ்மிநாராயணன் says :
குங்குமம் திரைப்படத்தில் சாரதாவுடன் சேர்ந்து சிவாஜி பாடும் அந்த சின்னஞ் சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா….என்ற பாடலில் ஏற்ற இறக்கங்களுடன் அவர் செய்யும் அபி நயங்கள் அபாரம் !
M. SARASWATHI says :
பாசமலரில் அண்ணண் தங்கை பாசஉணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் அருமை ” கைவீசம்மா கை வீசு ” சொல்ற போதே நம் கண்களில் நம்மை அறியாமை கண்களில் கண்ணீர் வருகிறது!
வங்கி லாக்கர்..
MALAPALANIRAJ says :
லாக்கர் பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா. எனக்கு இது பற்றி புரிய வைத்த ஜி.எஸ்.எஸ்.சாருக்கு நன்றி.