தேசிய கீதம் சில தகவல்கள்.

தேசிய கீதம் சில தகவல்கள்.

Published on

மது இந்திய தேசிய கீதமான ஜனகனமன என்ற பாடலை இயற்றியவர் ரவீந்திரநாத் தாகூர். கொல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தலைவர்கள் முன்னிலையில் முதன் முதலாக இப்பாடலைப் பாடியவர் சரளாதேவி சோத்ரானி ஆவார்.1947ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடிய ஐ. நா. சபையில் இந்தியக் இசைக்குழுவினர் அனைவரும் சேர்ந்து ஜனகனமன பாடலை முறைப்படி இசைத்தார்கள். அதனைக் கேட்டு அனைவரும் கை தட்டி இப்பாடலை வரவேற்றனர்.

1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி அன்றைய ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத் இப்பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக அறிவித்தார். இந்தியாவின் பன்முகத் தன்மையை வலியுறுத்தும் இப்பாடல் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

தேசிய கீதத்தை தமிழில் பாடுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையில் ஏற்றிய முதல் தேசியக் கொடியை தயாரித்து வழங்கியவர், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த வெங்கடாசல செட்டியார் என்பவர். தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரேந்திர நாத்பானர்ஜி. வந்தே மாதரம் பாடலை பக்கிம் சந்திர சாட்டர்ஜி உருவாக்கினார். இதன் ஆங்கிலமொழி பெயர்ப்பை மகான் அரவிந்தர் செய்தார். பல சிறப்புகள் கொண்ட நம் தேசிய சின்னங்களை‌போற்றி பாதுகாப்போம்.

logo
Kalki Online
kalkionline.com