சொந்த சமூக வலைதளம் தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்!

சொந்த சமூக வலைதளம் தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் Truth Social என்ற பெயரில் சமூக வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்ததையடுத்து புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜோ பைடனுக்கு எதிராக தனது சமூக வலைதளத்தில் டிரம்ப் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரது சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து டிரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், ட்ரம்ப் தனியாக Truth Social என்ற சமூக வலைதளத்தை உருவாக்கி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

ட்விட்டரில் தலிபான்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இவற்றை பார்த்துக்கொண்டு அதிபர் ஜோ பைடன் ஏதும் செய்யாமல் இருக்கிறார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என் சொந்த சமூக வலைதளத்தில் இவைகுறித்து விரிவாக கருத்துக்களைத் தெரிவிப்பேன்.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com