இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட வீரர்கள், நேற்று காலை மும்பையிலிருந்து தனி விமானத்தில் தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளனர். நேற்று மாலையில் ஜோக்கன்பார்க் சென்ற இந்திய வீரர்கள் ‘தென் ஆப்பிரிக்காவை அடைந்துவிட்டோம்‘ என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பதிவிட்டு சில புகைப்படங்களையும் வெளியிட்டட்து வைரலாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்திய வீரர்கள் அங்கு சென்றதும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இணைவார்கள் என்று தெரியவருகிறது.
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் இம்மாதம் 26-ம் தேதி செஞ்சுரியனில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
From Mumbai to Jo'Burg! 👍 👍
Capturing #TeamIndia's journey to South Africa 🇮🇳 ✈️ 🇿🇦 – By @28anand
Watch the full video 🎥 🔽 #SAvINDhttps://t.co/dJ4eTuyCz5 pic.twitter.com/F0qCR0DvoF
— BCCI (@BCCI) December 17, 2021