தென்னாப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்திய அணி போராடி தோல்வியுற்றது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களும் தென்ஆப்பிரிக்கா அணி 229 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 2-வது இன்னிங்சில் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. அதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளூம் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com