0,00 INR

No products in the cart.

 ‘மிஸ் இந்தியா 2022’: பட்டம் வென்றார் சைனி ஷெட்டி!

இந்த ஆண்டுக்கான  ‘ஃபெமினா மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’ பட்டத்திற்கான இறுதிச்சுற்றுப் போட்டி நேற்று ( ஜூலை 3)  மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களிலிலிருந்து தேர்வான 31 மாடல் அழகிகள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியின் இறுதியில் கர்நாடாகாவைச் சேர்ந்த சைனி ஷெட்டி என்ற 21 வயது மாடல், ‘ஃபெமினா மிஸ் இந்தியா 2022′ பட்டத்தை தட்டிச்சென்றார்.

மேலும் முதல் ரன்னர்-அப்  வெற்றியாளராக ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத், இரண்டாம் ரன்னர்-அப்  வெற்றியாளராக உத்தரப்பிரதேசத்தின் ஷினாதா சவுகான் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இந்த ‘மிஸ்.இந்தியா’ போட்டியின் இறுதிச் சுற்றுக்கான நடுவர்களாக முன்னாள் ‘மிஸ்.இந்தியா’ வெற்றியாளர்களும் பாலிவுட் நடிகைகளுமான நேஹா தூபியா, மலாய்கா அரோரா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பாலிவுட் நடிகா் டினோ மோரியா, ஃபேஷன் டிசைனர் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குநா் ஷியாமக் தவாா், இந்திய மகளிா் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோா் இந்த அழகிப் போட்டி இறுதிச் சுற்றின் நடுவா்களாக செயல்பட்டனா்.

Stay Connected

261,078FansLike
1,920FollowersFollow
11,300SubscribersSubscribe

Other Articles

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...

சிவரஞ்சனியும் லஷ்மி பிரியாவும்!

0
-தனுஜா ஜெயராமன். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளில்  தமிழ்படங்கள் மட்டுமே ஒன்பது விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சியான சேதி! கொரானாவால் சற்று தொய்வடைந்திருக்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்த விருதுகள் நம்பிக்கையும் உற்சாகமும் தருகின்றன.   "சிவரஞ்சனியும்...

திருச்சூர் ஆனை ஊட்டு விழா கோலாகலம்!

0
-ஜிக்கன்னு, திருச்சூர். கேரளாவில் ஒவ்வொரு வருடமும் கர்க்கட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில்  கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஒரு மாதத்துக்கு நடத்தப்படுவது வழக்கம். கேரள மாநிலம் திருச்சூர் பாலக்காடு எர்ணாகுளம் கோட்டையம்...