பசுமையான பூமியை பரிசாக விட்டுச் செல்வோம்!

பசுமையான பூமியை பரிசாக விட்டுச் செல்வோம்!

-தனுஜா ஜெயராமன் 

(உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 5)

உலக சுற்றுசுழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் 1974- ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்று சூழல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்புவியினை மாசுபட்டு வரும் பல்வேறு காரணிகளிடமிருந்து  பாதுகாத்து வரும் நல்ல நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புவிவெப்பமயமாதல் குறித்து சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

புவி வெப்பமயமாகுதல் என்பது உலக சுற்றுசூழலுக்கு விடப்பட்ட ஆகப்பெரும் எச்சரிக்கை. பூமியில் உள்ள மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகள் காரணமாக பூமி வெப்பமடைந்து உலகில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகன பெருக்கம் சுற்றுசூழலை பெரிதும் பாதிக்கும் காரணிகள்.

பெருகி வரும் தொழிற்சாலைகள் அதன் கழிவுநீர்கள் மற்றும் அதிலிருந்து வெளியேறும்  நச்சு புகைகள் போன்றவை சுற்று சூழலை பதம் பார்க்கவல்லவை.  இதனால் பருவநிலையில் மாறுதல்கள், பனிபாறை உருகுதல் மற்றும் கடல்நீர் மட்டம் உயருதல் போன்ற பல்வேறு  இயற்கை மாற்றங்கள் ஏற்படும் இதனால் பல்வேறு அபாயங்கள் உண்டு என்கிறார்கள்.

இதனால் சுற்றுசூழலை பாதுகாப்பதன் மூலமும், அதனை சீராக்கும் நோக்கத்திலும் இது குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நாளே இந்த சுற்று சூழல் தினம் .

அரசாங்கமும் மண்ணை மலடாக்கும் ப்ளாஸ்டிக் பயன்பாடுகளை குறைத்தல், மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்தை கட்டுpபடுத்துதல் போன்றவை குறித்து பல்வேறு விழிப்புணர்வு ப்ரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

உலகின் சுற்று சூழலை பாதுக்காக்கும் கடமை ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. நம் வரையில் சுற்று சூழலை சீர்குலைக்கும் எச்செயலையும் செய்யமாட்டோம் என்ற உறுதியினை எடுத்துக்கொள்வோம். வருங்கால தலைமுறையினருக்கு பசுமையான மற்றும் தூய்மையான பூமியை விட்டு செல்வோம்!! இயற்கை செல்வங்களான நீர் நிலம் காற்று ஆகியவற்றை தூய்மையாக பாதுகாத்து, நமக்கு அடுத்து வரும் தலைமுறையினருக்கு பரிசளிப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com