0,00 INR

No products in the cart.

கிராஃபிக் காட்சியை உண்மை என நம்பும் கிரண் பேடி!

ஹாலிவுட் திரைப்பட கிராபிக் காட்சியை உண்மை என்று நம்பி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி தன் ட்விட்டரில் பதிவிட்டது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்ற கிரண் பேடி. பின்னர் பிஜேபி-யில் இணைந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி வகித்தார். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் கிரண்பேடி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் உலா வரும் போலி வீடியோக்களை, உண்மை என நினைத்து கிரண் பேடி அவற்றை ட்விட்டரில் ஷேர் செய்து பலரின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.

அந்த வகையில், கிரண்பேடி நேற்று சேர் செய்த ஒரு வீடியோ;

வானில் பறக்கும் ஹெலிகாப்டர் ஒன்றை சுறா மீன் ஒன்று தாவிப் பிடித்து கடலுக்குள் இழுத்து செல்வதை போன்ற காட்சி கொண்ட அந்த வீடியோவில் ‘இந்த அரிய வீடியோவுக்கு நேஷனல் ஜியோகிரபி சேனல் 1 மில்லியன் டாலர் பரிசளித்துள்ளது ’ என கேப்ஷன் எழுதப்பட்டுள்ளது.

உன்மையில் இந்த வீடியோ 2017-இல் வெளியான ‘ஃபைவ் ஹெட்டட் ஷார்க் அட்டாக்’ என்ற திரைப்படத்தில் வரும் ஒரு கிராபிக் காட்சி! அதையறியாமல், கிரண்பேடி ஷேர் செய்ய நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். “இது போலி வீடியோ என்பது பார்த்ததுமே புரியும். ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவருக்கு இது கூட தெரியவில்லையே?!” என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

கிரண்பேடி இவ்வாறு போலியான வீடியோக்களை உண்மை என எண்ணி, ஷேர் செய்வது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு, அண்டவெளியில் சூரியனில் இருந்து ஓம் என்ற ஓசை ஒலிப்பதாக கூறி ஒரு போலி வீடியோ உலா வந்தது. அதையும் உண்மை என நம்பி பதிவிட்டு, விமர்சனத்துக்கு உள்ளானார்.அதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று ஒரு வயதான மூதாட்டி தனது வீட்டில் நடனமாடுவது போல ஒரு வீடியோ வெளியானது. அந்த மூதாட்டி பிரதமர் மோடியின் தாயார் என கிண்டலுக்காக குறிப்பிட்டிருந்தனர். இதையும் உண்மை என நம்பி, கிரண்பேடி தனது ட்விட்டரில் ஷேர் செய்து, வாங்கிக் கட்டிகொண்டார்.

மேலும், அதே ஆண்டு இந்திய குடியரசு தினத்தன்று உலகிலுள்ள அனைத்து புராதன சின்னங்களும் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் மிளிர்வது போல ஒரு புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அதை தன் ட்விட்டரில் பகிர்ந்த கிரண் பேடி, அதற்கு “அருமை..ஜெய்ஹிந்த்” என வாசகத்தையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வேத பிரம்மத்துடன் நாத உபாசனை: வித்வான் பி.ராஜம் அய்யர் நூற்றாண்டு விழா!

0
-சுமதி சுந்தரம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் தினம். சென்னை கச்சேரி ஒன்றில் அந்த பிரபல பாடகர் தீஷிதர் க்ருதிகளை அற்புதமாகப் பாட, நேரம் போனதே தெரியவில்லை. கச்சேரி முடிந்ததும்  வழக்கம் போல...

பெல்காம் யாருக்கு? சந்தன மாநில​ம் vs சிவாஜி மாநிலம்!

0
-ஜி.எஸ்.எஸ். மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் மேடை ஒன்றில்  ‘இது மகாராஷ்டிர மாநிலம் உருவான தினம்.  இதை நாம் கொண்டாடுகிறோம்.  ஆனால் மராத்தி மொழியைப் பேசிக் கொண்டிருக்கும் சில பகுதிகள்  நம்...

பயணிகள் கவனிக்கவும்: வித்தார்த் நேர்காணல்!

0
பேட்டி: ராகவ் குமார். தமிழ் சினிமாவில் எப்போதாவது சில படங்கள் தந்தாலும் மனதில் நிற்கும் படியான பட ங்களை தந்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார வித்தார்த். இந்த ஆண்டு தொடக்கத்தில் கார்பன் என்ற...

‘’பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்’’: நடிகை சமந்தா!

0
-ஜி.எஸ்.எஸ். நடிகை சமந்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'ஒருபோதும் பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்' என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் 'பச்சை குத்திக் கொள்ள எந்த வாசகத்தை அல்லது படத்தைத்...

வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் அசத்தும் ஆசிரியர்!

0
- ஜிக்கன்னு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் வாட்டர் ஆப்பிள் பழ சாகுபடியை தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் செய்து அசத்துகிறார். தர்மபுரியில் அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறன்...