மகாசிவராத்திரி சிறப்பு;  சதுரகிரி கோவிலில்  பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி!

மகாசிவராத்திரி சிறப்பு; சதுரகிரி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுந்தர மகாலிங்கம் கோவில் நிர்வாகம் தெரிவித்ததாவது:

இந்த கோயில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், மற்றும்  பௌர்ணமிக்கு 4  நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பகதர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

அந்த வகையில் இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.மேலும் காலை 7 மணி முதல் 11 மணி வரை 4  மணி நேரம் மட்டுமே மலைகோவிலுக்கு  பக்தர்கள் செல்ல அனுமதிக்கபடுவர். மேலும் கோவில்களில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை,பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

-இவ்வாறு கோவில் நிர்வாகம் சார்பில்  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மகா சவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com