உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள்; மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கல்!

உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள்; மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கல்!

Published on

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள்  வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொது சபையின் 11வது அவசர கூட்டத்தில் கலந்து கொண்டு, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:

உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான போரில் சிக்கி தவித்த இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்காக உக்ரைனின் அண்டை நாடுகள், தங்களின் எல்லைகளை திறந்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததற்கு நன்றி. மேலும், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் இருந்து உதவி கோருபவர்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. அந்த வகையில் உக்ரைனுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது.  நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதே இந்தியாவின் நிலையான நிலைப்பாடு.  மேலும், இருநாடுகளும் போரை கைவிட்டு அமைதியான பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை இந்தியா வலியுருத்துகிராரோ.

-இவ்வாறு டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com