
கடந்த மாதம் 19-ம் தேதியன்று தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேதலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களூக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் பதவி ஏற்க வந்த பாஜக, மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து பதவியேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 9 இடங்களையும், திமுக, காங்கிரஸ் தலா இரண்டு, பாஜக, தேமுதிக தலா ஒன்று மற்றும் சுயேச்சைகள் மூவர் என வெற்றி பெற்றுள்ளனர். இங்கு பாஜக ஆதரவுடன் அதிமுக பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இன்று பதவியேற்பு விழா நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் அந்ததந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திசையின்விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபேறது. அப்போது அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்தபடி அலுவலகம் நோக்கி வந்தனர். அதிமுக கவுன்சிலர்களை திமுகவினர் மிரட்டி கடத்த திட்டமிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மாவட்ட செயலாளர் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் தங்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினால், அதிலிருந்து காத்து கொள்வதற்காக ஹெல்மெட் அணிந்து வந்ததாகவும் அதிமுக உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.