உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: பைனாகுலர் மூலம் வாக்கு இயந்திர அறையைக் கண்காணிக்கும் வேட்பாளர்!

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: பைனாகுலர் மூலம் வாக்கு இயந்திர அறையைக் கண்காணிக்கும் வேட்பாளர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யோகேஷ் சர்மா என்பவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பைனாகுலர் மூலம் கண்காணித்து வருவது பரபரப்பிக் கிள்ப்பியுள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

இந்த தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவே பைனாகுலரால் கண்காணித்து வருகிறேன்.

-இவ்வாறு சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான யோகேஷ் சர்மா தெரிவித்தார்.  கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் யோகேஷ் சர்மா போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com