CSK –யிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகல்; காயம் காரணம்!

CSK –யிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகல்; காயம் காரணம்!

Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து பின்னர் பதவி விலகிய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா, பீல்டிங்கின்போது ஏற்பட்ட காயம் காரணமாக  இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து ஐபிஎல் கிரிக்கெட் வாட்டாரங்களில் தெரிவிக்கப் பட்டதாவது:

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ரவீந்திர  ஜடேஜா தலைமையில் களமிறங்கி, தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே கேப்டன் பதவியை தோனியிடமே கொடுத்தார் ஜடேஜா. அதன்பிறகும் ஜடேஜா தன் ஆட்டத்தில் பெருமளவு சோபிக்கவில்லை பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரு துறைகளிலும் சொதப்பினார்.

இதுவரை ரவீந்திர  ஜடேஜா ஐபிஎல்  சீசனில் ஆடியதில் மொத்தமாக பேட்டிங்கில் 116 ரன்களும் பவுலிங்கில்  5 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்துள்ளார். 

இந்நிலையில் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா பீல்டிங் செய்யும்போது காயமடைந்தார். அதனால் அதற்கடுத்து 

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா களமிறங்கவில்லை.

இந்நிலையில் நாளை நடைபெற்வுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க மாட்டார் எனக்கூறப்படுகிறது.

மருத்துவர்கள் அவரை முழுமையாக ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால், இந்த சீசன் ஐபில் தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com