டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: தடுத்து நிறுத்திய காவல்துறை!

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: தடுத்து நிறுத்திய காவல்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில்  தமிழக விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 80-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த வந்தபோது, டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வந்தவர்களை ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியதுள்ளது காவல்துறை. 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் எல்லையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் நெல், கரும்புக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்தக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திருச்சியிலிருந்து டெல்லிக்கு தமிழக விவசாயிகள் ரயில் மூலம் வந்தனர்.

அய்யாக்கண்ணு தலைமையில் வந்த 80 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்பதால் அவர்களை திரும்பி செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்து விவசாயிகள் டெல்லி  ரயில் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பஞ்சாப் விவசாயிகளை போல காலவரையறையின்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com