காதலர் தினத்தில் கரம்பிடித்த திருநங்கை- திருநம்பி ஜோடி: கேரளாவில் பரபரப்பு!

காதலர் தினத்தில் கரம்பிடித்த திருநங்கை- திருநம்பி ஜோடி: கேரளாவில் பரபரப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

நேற்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தன்று திருவனந்தபுரத்தில் திருநங்கையும் திருநம்பியுமான  காதல் ஜோடி திருமணம் செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேரளாவில் திருச்சூரைச் சேர்ந்த திருநம்பியான  மனு கார்த்திகா (31).திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார். இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் திருநங்கை சியாமா பிரபா (31). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், காதலர் தினமான நேற்று திருவனந்தபுரத்தின் இடுப்பாஞ்சியில் உள்ள அழகாபுரி அரங்கத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து உறவினர்களும், நண்பர்களும் தம்பதியை வாழ்த்தினர்.

இத்திருமணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com